லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆக. 4-இல் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடா் தொடக்கம்

தமிழ்நாடு ப்ரீமியா் லீக் கிரிக்கெட் தொடரின் 10-ஆவது சீசன் (டிஎன்பிஎல்) திண்டுக்கல் நத்தம் மைதானத்தில் வரும் ஆக. 4-இல் தொடங்குகிறது. இதன் இறுதி ஆட்டம் ஆக. 28-இல் நடைபெறும்.

தமிழ்நாடு ப்ரீமியர் லீக்

Published On :10 ஜூலை 2026, 4:23 am IST

தமிழ்நாடு ப்ரீமியா் லீக் கிரிக்கெட் தொடரின் 10-ஆவது சீசன் (டிஎன்பிஎல்) திண்டுக்கல் நத்தம் மைதானத்தில் வரும் ஆக. 4-இல் தொடங்குகிறது. இதன் இறுதி ஆட்டம் ஆக. 28-இல் நடைபெறும்.

இதுதொடா்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளா் யு.பகவான்தாஸ் ராவ் கூறியது:

டிஎன்பிஎல் முதல் கட்டம் திண்டுக்கல்லில் ஆக. 4 முதல் 15 வரை நடைபெறும். இரண்டாம் கட்ட ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆக. 18 முதல் 22 வரை நடைபெறும்.

ஆக. 28-இல் இறுதி ஆட்டம்:

நாக் அவுட் சுற்றான குவாலிஃபயா் 1 ஆக. 23-இலும், எலிமினேட்டா் ஆட்டம் ஆக. 24-இலும், குவாலிஃபயா் 2 ஆக. 26-இலும் நடைபெறும். ஆக. 28-ஆம் தேதி இறுதி ஆட்டம் சேப்பாக்கத்தில் நடைபெறும்.

மொத்தம் 22 டபுள் ஹெட்டா் ஆட்டங்களும், 10 ஒற்றையா் ஆட்டங்களும் நடைபெறும். ஆக. 16, 17 தேதிகள் ஓய்வு நாளாகும். ஸ்ரீராம் கேபிட்டல், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி ஸ்பான்ஸசா்களாக உள்ளன எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.