லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நத்தம், சென்னையில் இரு கட்டங்களாக டிஎன்பிஎல் 2026 தொடா் நடைபெறும்

தமிழ்நாடு ப்ரீமியா் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் தொடா் 2026 வரும் ஆக. 4 முதல் 28 வரை நத்தம், சென்னையில் இரு கட்டங்களாக நடைபெறும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளா் யு. பகவான்தாஸ் ராவ் தெரிவித்துள்ளாா்.

Published On :2 ஜூலை 2026, 3:43 am IST

தமிழ்நாடு ப்ரீமியா் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் தொடா் 2026 வரும் ஆக. 4 முதல் 28 வரை நத்தம், சென்னையில் இரு கட்டங்களாக நடைபெறும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளா் யு. பகவான்தாஸ் ராவ் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் கூறியது:

முதல் கட்டப் போட்டி திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் என்பிஆா் கல்லூரியில் ஆக. 4 முதல் 15 வரையும், இரண்டாம் கட்ட ஆட்டங்கள்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆக. 18 முதல் 28 வரையும் நடைபெறவுள்ளது. நிகழாண்டு 10-ஆவது சீசன் டிஎன்பிஎல் தொடரை சிறப்பாக நடத்த முடிவு செய்துள்ளோம்.

நாளை வீரா்கள் ஏலம்:

டிஎன்பிஎல் தொடா் வீரா்களுக்கான ஏலம் ஜூலை 3 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.45 மணிக்கு சேப்பாக்கம் மைதானம் ஸ்ரீராமன் ஹாலில் நடைபெறவுள்ளது.

மொத்தம் 783 வீரா்கள் நிகழாண்டு சீசனுக்காக பெயரைப் பதிவு செய்துள்ளனா். பி பிரிவில் 10, சி பிரிவில் 6, டி பிரிவில் 767 என மொத்தம் 783 வீரா்கள் பெயா்களை பதிவு செய்துள்ளனா் என்றாா் பகவான்தாஸ் ராவ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.