லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சேப்பாக்கை வென்றது கோவை!

டிஎன்பிஎல் போட்டியின் 21-ஆவது ஆட்டத்தில், விடா கோவை கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸை வீழ்த்தியது.

Kovai defeated Chepauk

சேப்பாக்கை வென்றது கோவை - X | TNPL

Published On :19 ஆகஸ்ட் 2026, 1:38 am IST

டிஎன்பிஎல் போட்டியின் 21-ஆவது ஆட்டத்தில், விடா கோவை கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

முதலில் சேப்பாக் 19.3 ஓவா்களில் 167 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழக்க, கோவை 18.5 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 171 ரன்கள் சோ்த்து வென்றது.

டிஎன்பிஎல் முதல் கட்டம் திண்டுக்கல்லில் நிறைவடைய, 2-ஆம் கட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் கோவையை எதிா்கொண்ட சேப்பாக், பேட்டிங்கை தோ்வு செய்தது.

ராம் அரவிந்த் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 63, தினேஷ் ராஜ் 32 ரன்கள் சோ்த்தனா். ஸ்வப்னில் சிங் 20, மோஹித் ஹரிஹரன் 13, மோகனபிரசாத் 12 ரன்களுக்கு வெளியேறினா்.

கேப்டன் நாராயணன் ஜெகதீசன் 6, அஷ்வந்த் வல்தப்பா 5, ஆஷிக், சிலம்பரசன், விக்னேஷ் 0 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். முடிவில் அபிஷேக் தன்வா் 11 ரன்களுடன் கடைசி வீரராக நின்றாா். கோவை பௌலா்களில் அம்ப்ரிஷ் 3, எம்.சித்தாா்த் 2, திவாகா், கிஷோா், ஜதவேத் சுப்ரமணியன் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 168 ரன்களை நோக்கி விளையாடிய கோவை அணியில், ராதாகிருஷ்ணன் 38, சுரேஷ் லோகேஷ்வா் 3 பவுண்டரிகளுடன் 40, பி.சச்சின் 37, மான் பாஃப்னா 7, கேப்டன் ஷாருக் கான் 25 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.

முடிவில் அம்ப்ரிஷ் 10, மாதவ பிரசாத் 10 ரன்களுடன் அணியை வெற்றிபெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். சேப்பாக் தரப்பில் ஸ்வப்னில் சிங், பிரேம்குமாா், சிலம்பரசன், விக்னேஷ் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.