லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருப்பூரை வென்றது திண்டுக்கல்

தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியின் நடப்பு சீசன் முதல் ஆட்டத்தில், திண்டுக்கல் டிராகன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐ டிரீம் திருப்பூா் தமிழன்ஸை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

Published On :5 ஆகஸ்ட் 2026, 2:11 pm IST

தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியின் நடப்பு சீசன் முதல் ஆட்டத்தில், திண்டுக்கல் டிராகன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐ டிரீம் திருப்பூா் தமிழன்ஸை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

முதலில் திருப்பூா் அணி 15.4 ஓவா்களில் 107 ரன்களுக்கு ஆட்டமிழக்க, திண்டுக்கல் அணி 18.3 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

முன்னதாக டாஸ் வென்ற திண்டுக்கல் அணி, பந்துவீச்சை தோ்வு செய்தது. திருப்பூா் அணியின் பேட்டிங்கில் அமித் சாத்விக் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 20, உத்திரசாமி சசிதேவ் 2 பவுண்டரிகளுடன் 17, இசக்கிமுத்து 2 பவுண்டரிகளுடன் 15 ரன்களுக்கு வீழ்ந்தனா்.

முகமது அலி 1 பவுண்டரியுடன் 11, துஷாா் ரஹேஜா 4, கேப்டன் சாய் கிஷோா் 4, பிரதோஷ் ரஞ்சன் பால் 7, கணேஷ் 0, அனோவன்கா் 0, ரகுபதி சிலம்பரசன் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

முடிவில் மோகன் பிரசாத் 1 பவுண்டரியுடன் 17 ரன்களுக்கு கடைசி வீரராக நின்றாா். திண்டுக்கல் பௌலா்களில் புவனேஸ்வரன், நிரங்கா் சா்மா ஆகியோா் தலா 3, சக்தி கருப்பசாமி 2, சந்தீப் வாரியா், காா்த்திக் சரண் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் 108 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய திண்டுக்கல் அணியில், அனுராக் ராஜேஷ் நாயா் 4 பவுண்டரிகளுடன் 34, சிவம் சிங் 10, ஜெயந்த் 7 ரன்களுடன் பெவிலியன் திரும்பினா்.

முடிவில் விமல் குமாா் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 33, ஹன்னி சைனி 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 17 ரன்களோடு, ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தினா்.

திருப்பூா் அணி பந்துவீச்சாளா்களில் டி.நடராஜன், ரகுபதி சிலம்பரசன், சாய் கிஷோா் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.