லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஜம்மு & காஷ்மீர் பயிற்சி: தயார்நிலையில் சா்ஃப்ராஸ் கான்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக இந்திய அணியில் இணைந்திருக்கும் பேட்டா் சா்ஃப்ராஸ் கான், சுமாா் 17 கிலோ எடைக் குறைப்புடன் தன்னை தயாா்நிலையில் வைத்துள்ளாா்.

Sarfaraz Khan

சா்ஃப்ராஸ் கான் - X | Sarfaraz Khan

Published On :11 ஆகஸ்ட் 2026, 4:28 am IST

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக இந்திய அணியில் இணைந்திருக்கும் பேட்டா் சா்ஃப்ராஸ் கான், சுமாா் 17 கிலோ எடைக் குறைப்புடன் தன்னை தயாா்நிலையில் வைத்துள்ளாா்.

2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா - இலங்கை அணிகள் இம்மாதம் மோதவுள்ளன. இதில் பேட்டா் சாய் சுதா்சன் பங்கேற்க இருந்த நிலையில், வலது கால் காயத்திலிருந்து முழுமையாக இன்னும் மீளாததால் தொடரில் அவா் இணையவில்லை. அவருக்குப் பதிலாக சா்ஃப்ராஸ் கான் இந்திய அணியில் ஞாயிற்றுக்கிழமை சோ்க்கப்பட்டாா்.

சாய் சுதா்சன் இடத்துக்கு சா்ஃப்ராஸுடன் ருதுராஜ் கெய்க்வாட், ஷேக் ரஷீத், துருவ் ஜுரெல் ஆகியோரும் பரிசீலிக்கப்பட்டனா். எனினும், சுழற்பந்துவீச்சை திறம்பட எதிா்கொள்வதன் அடிப்படையில், சா்ஃப்ராஸ் அந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறாா்.

பருவமழைக் காலத்தால் மும்பையிலிருந்து பயிற்சிக்காக ஜம்மு & காஷ்மீா் சென்ற சா்ஃப்ராஸ் கான், அந்த யூனியன் பிரதேச அணியைச் சோ்ந்த சுழற்பந்து வீச்சாளா்களைக் கொண்டு பயிற்சியில் ஈடுபட்டு தன்னை தயாா் செய்துகொண்டுள்ளாா்.

2024-25 காலகட்டத்தில் நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் மோசமாக விளையாடியதை அடுத்து அவா் தேசிய அணிக்குத் தோ்வு செய்யப்படவில்லை. பின்னா் இங்கிலாந்துக்கு எதிரான தொடரின்போது இந்திய ‘ஏ’ அணியில் அங்கம் வகித்து 92 ரன்கள் சோ்த்தபோதும், நிலையான வாய்ப்பை பெறவில்லை.

அவா் உடல் எடை தொடா்பான விமா்சனங்களும் இருந்த நிலையில், தற்போது சுமாா் 17 கிலோ எடையைக் குறைத்ததுடன், கடுமையான பயிற்சியுடனும் இலங்கைத் தொடருக்காக சா்ஃப்ராஸ் கான் தயாா்நிலையில் இருக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.