பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.71 ஆக நிறைவு!சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றத்துடன் நிறைவு!!காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்புதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு! மாலை நிலவரம்! (ஆக.21)

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இலங்கை அணியில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதைப் பற்றி...

சஹான் அரச்சிங்கே. - @OfficialSLC

Published On :21 ஆகஸ்ட் 2026, 7:47 pm IST

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளும் மோதிய போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்து 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

ஆகஸ்ட் 23-ஆம் தேதி கொழும்புவில் தொடங்கும், இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் இருக்கும் இலங்கை அணி, புதுமுகங்களை தங்கள் அணியுடன் சேர்த்துள்ளது.

அதன்படி, ஆஃப்-ஸ்பின் ஆல்-ரவுண்டர் சஹான் அரச்சிங்கே மற்றும் கமில் மிஷாரா ஆகியோருக்கு முதல்முறையாக டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் ஒரு டி20 போட்டியிலும் விளையாடியுள்ள அரச்சிங்கே, ரமேஷ் மெண்டிஸுக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் இலங்கை 'ஏ' அணிக்காக விளையாடிய அவர், இந்தியாவுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

முதல் டெஸ்ட் போட்டியில் சரியாக சோபிக்காத நிஷான் பெர்னாண்டோவுக்குப் பதிலாக கமில் மிஷாராவும், காயமடைந்த தினேஷ் சண்டிமாலுக்குப் பதிலாக பசிந்து சூரியபண்டாராவும் அணியில் இடம் பெற்றிருக்கின்றனர்.

Summary

Sri Lanka have included batter Kamil Mishara and all-rounder Sahan Arachchige in their Test squad for the upcoming second Test against India in Colombo, as the hosts aim to recover from a 165-run loss in the opening match at Galle.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.