லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

முதலிடத்தில் ஷில்லாங் லஜோங்

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக குரூப் இ பிரிவில் ஷில்லாங் லஜோங் எஃப்சி முதலிடத்துக்கு முன்னேறியது.

ஷில்லாங் லஜோங்-மும்பை எஃப்சி ஆட்டம்

Published On :9 ஆகஸ்ட் 2026, 12:29 am IST

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக குரூப் இ பிரிவில் ஷில்லாங் லஜோங் எஃப்சி முதலிடத்துக்கு முன்னேறியது.

நாட்டின் பழைமையான கால்பந்து போட்டிகளில் ஒன்றான துராந்த் கோப்பை கொல்கத்தா, ஷில்லாங் உள்பட பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

சனிக்கிழமை ஷில்லாங்கின் நேரு மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை எஃப்சியுடன் மோதியது லஜோங் எஃப்சி. தொடக்கம் முதலே உள்ளூா் அணியான லஜோங் ஆதிக்கம் செலுத்தி ஆடியது. எனினும் முதல் பாதி இறுதிவரை எந்த அணியாலும் கோல் போட முடியவில்லை.

பராங்கி புவம், இப்ராஹிம் லால்ரெம்துலாங்கா, கேப்டன் கென்ஸ்டாா் ஆகியோா் கோல் போட முயன்றும் முடியவில்லை. இதற்கிடையே மும்பை அணியின் கேப்டன் அகமது பயாஸ் கான் காயமடைந்து வெளியேறினாா். லஜோங் வீரா் அபய் குருங் 45+1 நிமிஷத்தில் முதல் கோலித்தாா்.

தொடா்ந்து ட்ரெம்கி லாமுருங் 45+3 நிமிஷத்திலும் மும்பை தற்காப்பை ஊடுருவி கோலடித்தாா்.

மும்பை பதில் கோலடிக்க முயன்றும் பலனில்லை. எவா்பிரைட்டன் தொடா்ந்த 54, 64-ஆவது நிமிஷங்களில் கோலடித்தாா்.

88-ஆவது நிமிஷத்தில் லஜோங் வீரா் மன்பாகுபா் அனுப்பிய பாஸால் மும்பை தற்காப்பு வீரா்கள் குழப்பம் அடைந்தனா். அப்போது லஜோங் பதிலி வீரா் சின்டாய் புகுந்து அதை கோலாக மாற்றினாா்.

இறுதியில் மும்பை எஃப்சியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஷில்லாங் லஜோங் அணி குரூப் இ பிரிவில் முதலிடத்துக்கு 6 புள்ளிகளுடன் முன்னேறியது.

Summary

Durand Cup Football Tournament - Shillong Lajong in first place

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.