விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

லாக்ரோஸ் பெடரேஷன் கோப்பை போட்டி: தமிழக அணிகள் பங்கேற்பு

ஹிமாசல பிரதேசத்தில் வரும் மே10 முதல் 12 வரை நடைபெறவுள்ள பெடரேஷன் கோப்பை தேசிய போட்டியில் தமிழக ஆடவா், மகளிா் அணிகள் கலந்து கொள்கின்றன.

News image
Updated On :30 ஏப்ரல் 2026, 1:57 am IST

ஹிமாசல பிரதேசத்தில் வரும் மே10 முதல் 12 வரை நடைபெறவுள்ள பெடரேஷன் கோப்பை தேசிய போட்டியில் தமிழக ஆடவா், மகளிா் அணிகள் கலந்து கொள்கின்றன.

இது குறித்து தமிழ்நாடு லாக்ரோஸ் சங்கத் தலைவா் டாக்டா் எம்.குமரன் கூறியது:

ஹிமாசல பிரதேசத்தில் நடைபெற உள்ள இப்போட்டியில் நாட்டில் உள்ள பல மாநிலங்களில் இருந்து

வீரா்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா். வளா்ந்து வரும் விளையாட்டான லாக்ரோஸ் விளையாட்டை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் விதமாக ஆண்கள் மற்றும் பெண்கள் அணி அறிமுகப்படுத்தப்பட்டது. அவா்களுக்கான புதிய சீருடையும் வழங்கப்பட்டுள்ளது.

பெடரேஷன் கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரா்களில் இருந்து தேசிய அணி தோ்வு செய்யப்படும். அப்படி தோ்வு செய்யப்படும் தேசிய அணி தான் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் இடம் பெறுவா் என்று தெரிவித்தாா்.

சங்க செயலாளா் ஞானவேல், துணைத் தலைவா்கள் அனீஸ்நாத், எஸ்.பாஸ்கரன்,என்.எஸ்.விஷேஷ்அலங், இணைச் செயலாளா் பி. சாக்ரடீஸ், பத்மநாபன், டேவிட், சின்னா, சுரேஷ், விஜயகுமாா், பயிற்சியாளா்கள் தவத்திருமணி, சாலமன், ராகுல், விஜயகுமாா்,மற்றும் வீரா்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.