சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எளிதாக வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.
சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற 44-ஆவது லீக் சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் நிர்ணயித்த 160 ரன்கள் இலக்கை, 18.1 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து வெற்றியை ருசித்தது.
சென்னை அணியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். அவர் 48 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பௌண்டரிகளுடன் 67 ரன்கள் குவித்தார். அவருக்குப் பக்கபலமாக கார்த்திக் சர்மா 40 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பௌண்டரிகளுடன் 54 ரன்கள் திரட்டி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இந்த சீசனில் இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடிய சென்னை அணிக்கு இது 4-ஆவது வெற்றியாகும். மொத்தம் 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.
இன்னொருபுறம், இந்த சீசனில் மோசமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தும் மும்பை அணி, 9 ஆட்டங்களில் 7-ஆவது தோல்வியை பதிவு செய்தது. அந்த அணி புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் 9-ஆவது இடத்தில் தள்ளாடுகிறது.
ஏற்கெனவே சென்னை அணிக்கெதிரான கடந்த ஆட்டத்திலும் மும்பை அணி படுதோல்வியடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Chennai Super Kings vs Mumbai Indians, 44th Match, Indian Premier League 2026
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நமன் திர் அரைசதம்; சிஎஸ்கேவுக்கு 160 ரன்கள் இலக்கு!
ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!
முதல் வெற்றிக்காக ஏங்கும் கொல்கத்தா! குஜராத்துக்கு 181 ரன்கள் இலக்கு!
ஆர்சிபி சூப்பர் தொடக்கம்... மும்பைக்கு 241 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

