குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோல்வியடைந்தது. கொல்கத்தா அணி நிர்ணயித்த 181 ரன்களை குஜராத் டைட்டன்ஸ் அணி கடைசி ஓவரில் எட்டி வெற்றியை ருசித்தது.
அகமதாபாத்தில் நரேந்திர மோடி கிரிக்கெட் திடலில் இன்று(ஏப். 17) நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. குஜராத் அணியில் முகமது சிராஜ் சிறப்பாகப் பந்துவீசி கொல்கத்தா அணியின் ரன் ரேட்டைக் குறைத்தார். அவர் 4 ஒவர்களில் 23 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்.
அடுத்து, 181 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் அணி பவர் ப்ளே ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடியது. அந்த அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
இந்தத் தோல்வி மூலம், புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து கடைசி இடத்தை தக்க வைத்துக் கொண்டது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தடுமாறும் ராஜஸ்தான் ராயல்ஸ்; வெற்றியை தொடரும் முனைப்பில் குஜராத் டைட்டன்ஸ்!

பலம் வாய்ந்த ஆர்சிபியுடன் மோதும் குஜராத்: சாய் கிஷோருக்கு வாய்ப்பு கிடைக்குமா?

99 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது ஏற்கத்தக்கதல்ல: ஹைடன்

தில்லி பந்துவீச்சு: முதல் வெற்றிக்கான தேடலில் குஜராத்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
