கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சிஎஸ்கேவில் இணையும் ஹார்திக் பாண்டியா..! குறியீடுகள் சொல்வது என்ன?

ஐபிஎல் 2027 சீசனில் சிஎஸ்கே அணியில் ஹார்திக் பாண்டியா இடம்பெறுவாரா என்பது குறித்து...

Video released by CSK

சிஎஸ்கே வெளியிட்ட விடியோ - படம்: எக்ஸ் / சிஎஸ்கே

Published On :27 அக்டோபர் 2026, 8:08 pm IST

ஐபிஎல் 2027 சீசனில் சிஎஸ்கே அணியில் ஹார்திக் பாண்டியா இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக விடியோ வெளியாகியுள்ளது.

சிஎஸ்கே அணியில் புதியதாதாக பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதற்கான புரமோஷன் விடியோவில் பல குறியீடுகள் வைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை கோப்பை வென்ற அணிகளாக சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணிகள் இருக்கின்றன. இதில் மும்பை அணியின் கேப்டனாக இருக்கும் ஹார்திக் பாண்டியா அந்த அணியிலிருந்து விலகுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிஎஸ்கே அணிக்கு எம்.எஸ். தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு ருதுராஜ் கேப்டனாக இருக்கிறார். கடந்த 3 சீசன்களாக சொதப்பியே வருகிறது.

இந்த நிலையில், ஐபிஎல் அணிகளுக்கு இடையே டிரேடிங் நடந்து வருகின்றன. இதில் ஹார்திக் பாண்டியாவை யார் எடுக்கிறார்கள் என்பது பேசுபொருளாக இருக்கிறது.

இன்று சிஎஸ்கே வெளியிட்ட விடியோவில் ஒரு எண் அவுட் ஆஃப் போகஸில் காட்டப்படுகிறது. அதில் இருப்பது 33 அல்லது 53 அல்லது 55 என்று சரியாதக் தெரியவில்லை. 33 எண்ணாக இருந்தால் அது ஹார்திக் பாண்டியாவையும் 53ஆக இருந்தால் அது ஆவேஷ் கான், 55ஆக இருந்தால் வாஷிங்டன் சுந்தரையும் குறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான ரசிகர்கள் அந்த எண் 33 எனக் கூறி வருகிறார்கள். இதனால், ஹார்திக் சிஎஸ்கே அணியில் விளையாடுவார் எனக் கூறப்பட்டு வருகிறது.

Summary

CSK videos cryptic trade message Hardik Pandya is coming to Chepauk

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.