தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஹாசன் நவாஸ் (96) போராட்டம் வீண்: பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா!

ஆசிய விளையாட்டு ஆடவருக்கான கிரிக்கெட்டில் தங்கம் வென்ற இந்திய அணி குறித்து...

Indian cricket team

இந்திய கிரிக்கெட் அணி - படம்: எக்ஸ் / ஒலிம்பிக் கேல்

Published On :3 அக்டோபர் 2026, 2:35 pm IST

ஆசிய விளையாட்டு ஆடவருக்கான கிரிக்கெட்டில் பாகிஸ்தானை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி தங்கம் வென்றுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

கிரிக்கெட் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் குவித்தது. அபிஷேக் சர்மா, திலக் வர்மா அரைசதம் அடித்து அசத்தினார்கள்.

அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது.

அக்‌ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்கள். பும்ரா, ரவி பிஸ்னோய் விக்கெட் எதுவும் எடுக்காமல் ஆட்டத்தை முடித்தார்கள்.

இந்தப் போட்டியில் பாகிஸ்தானின் ஹாசன் நவாஸ் 96 ரன்கள் குவித்து அசத்தினார். இருப்பினும் அவரது போராட்டம் வீணானது. இறுதியில் இந்தியா தங்கம் வென்று அசத்தியது.

இத்துடன் இந்தியாவுக்கு 81 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இதில் 19 தங்கம், 26 வெள்ளி, 36 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. பதக்கப் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறது.

Summary

Hassan Nawaz's (96) fighting effort in vain: India defeats Pakistan to win gold!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.