நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிரசித் கிருஷ்ணா தயார்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா முழு உடல்தகுதி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரசித் கிருஷ்ணா. - படம் | AP
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா முழு உடல்தகுதி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான டி20 தொடர் அண்மையில் நிறைவடைந்தது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நாளை (நவம்பர் 4) தொடங்குகிறது. டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட பிரசித் கிருஷ்ணா முழு உடல்தகுதி பெற்றுள்ளதாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து பிரசித் கிருஷ்ணா விலகிய நிலையில், டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது அணிக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் வருகிற நவம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 23 வரையும், இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் வருகிற நவம்பர் 27 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 1 ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது.
Summary
Reports indicate that fast bowler Prasidh Krishna has attained full fitness to play in the Test series against New Zealand.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





