பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியிலிருந்து நியூசி. வீரர் டெவான் கான்வே விலகல்!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியிலிருந்து நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே விலகியுள்ளதைப் பற்றி...

Devon Conway in a celebratory mood after scoring a half-century.

டெவான் கான்வே - படம் | நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Published On :3 நவம்பர் 2026, 10:49 am IST

பயிற்சியில் சக வீரர் மேட் ஹென்றியுடன் மோதி காயமடைந்த நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20, 2 டெஸ்ட், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்தச் சுற்றுப்பயணத்தில் இந்தியா - நியூசிலாந்து இடையேயான டி20 தொடர் நேற்றுமுன் தினத்துடன் நிறைவடைந்தது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதனையடுத்து, இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நாளை (நவ. 4) தொடங்குகிறது.

இந்த நிலையில், நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரும் விக்கெட் கீப்பருமான டெவான் கான்வே சக வீரர் மேட் ஹென்றியுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

ஆக்லாந்தின் ஈடன் பார்க்கில் நடைபெற்ற அணியின் பயிற்சியின்போதுபந்தைப் பிடிக்க முயன்ற இரு வீரர்களும் மோதிக்கொண்டனர். இதில், டெவான் கான்வேவுக்கு மூளையதிர்ச்சி ஏற்பட்டது. இதனால், அவர் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

காயத்திலிருந்து மீண்டுவர தாமதம் ஆவதால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து நட்சத்திர வீரர்களான மார்க் சாப்மேன் மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் விலகியுள்ள நிலையில், டெவான் கான்வேயின் விலகல் நியூசிலாந்து அணிக்குப் பின்னடைவாக அமைந்திருக்கிறது.

Summary

Senior New Zealand batter Devon Conway has been ruled out of the first ODI against India here on Wednesday owing to a concussion that he suffered after colliding with teammate Matt Henry during a training session here.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.