ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி தனது முதல் பிளே ஆஃப்ஸ் ஆட்டத்திலேயே சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகன் விருது வென்றார். குறைவாக சிந்தித்து, அதிகமாகச் செயல்படுவதுதான் தனது தாரக மந்திரம் எனக் கூறியுள்ளார்.
நேற்றிரவு (மே.27) நடந்த எலிமினேட்டர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 243/8 ரன்கள் எடுக்க, அடுத்து விளையாடிய சன்ரைசர்ஸ் 19.2 ஓவர்களில் 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில் 97 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 5 பவுண்டரிகள், 12 சிக்ஸர்கள் அடித்து அனைத்து விருதுகளையும் வென்றார்.
ஆட்ட நாயகன் விருதுவென்ற பிறகு வைபவ் சூர்யவன்ஷி கூறியிருப்பதாவது:
வெற்றிபெறும்போது அதிலிருக்கும் நேர்மறையான எண்ணங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு அடுத்த போட்டிக்குச் செல்வேன். இதேபோல அடுத்த போட்டியிலும் வென்று இறுதிப் போட்டிக்குச் செல்ல வேண்டும்.
அடுத்த போட்டி குறித்து சிறிது யோசிக்கிறேன். ஆனால், அதிகளவு சிந்திக்க மாட்டேன். என்னுடைய இயல்பான ஆட்டத்தை விளையாடுவேன், தேவையில்லாமல் சிந்திக்க மாட்டேன். எங்காவது நான் முன்னேற வேண்டுமெனில் அதில் கவனம் செலுத்துவேன்.
எதிரணியில் யாரெல்லாம் பந்துவீச்சாளர்களாக இருக்கிறார்கள், பவுண்டரியில் தூரம் எவ்வளவு என்பது போன்ற விஷயங்கள் மட்டுமே பார்ப்பேன். என்னுடைய நோக்கத்தில் நான் நேர்மறையாக இருப்பேன். அதைச் செய்யும்போது பந்துவீச்சாளர்கள் அழுத்தத்திற்குச் செல்கிறார்கள். அதையே தொடர்ச்சியாக செய்து போட்டியில் ஆதிக்கம் செலுத்த விழைகிறேன்.
நான் ஆட்டமிழந்த பிறகுதான் அந்த சாதனை குறித்தே அறிந்தேன். அந்த நேரத்தில் எனது கவனம் எல்லாம் அணிக்கு உதவ வேண்டும் என்றே இருந்தேன். ஏனெனில் சதம் எப்போது வேண்டுமானல் அடிக்கலாம்; ஆனால், தற்போதைக்கு கோப்பை வெல்வது மட்டுமே முக்கியம்.
எனக்கு பலவீனம் என நான் உணர்ந்தால் அதைச் சரிசெய்ய உழைக்கிறேன். எதிரணியினர் என்ன மாதிரி திட்டம் தீட்டுகிறார் என்பது எனக்குத் தெரியாது. அது அவர்களது திட்டம். நான் என்னுடைய திட்டங்களில் கவனம் செலுத்துகிறேன். இயல்பான கிரிக்கெட் விளையாடுகிறேன் என்றார்.
Summary
Vaibhav Sooryavanshi’s mantra: think less, deliver
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சச்சின் சாதனை முறியடிப்பு..! குறைந்த வயதில் இந்திய அணியில் தேர்வான சூர்யவன்ஷி!

முதல் பிளே-ஆஃப்ஸ் போட்டி: பேட்டிங்கின் அனைத்து விருதுகளையும் பெற்ற சூர்யவன்ஷி!

பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!

வித்தியாசமான கொண்டாட்டத்துக்குக் காரணம் அம்மாதான்... மனம் திறந்த சூர்யவன்ஷி!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

