தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

பாட் கம்மின்ஸ் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்த சூர்யவன்ஷி..! 16 பந்துகளில் அரைசதம்!

சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் ஓவரில் அடித்து நொறுக்கிய சூர்யவன்ஷி குறித்து...

News image

வைபவ் சூர்யவன்ஷி. - படம்: எக்ஸ் / ராஜஸ்தான் ராயல்ஸ்.

Updated On :27 மே 2026, 7:59 pm IST

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஓவரில் 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து அசத்தினார்.

முல்லான்பூரில் நடைபெற்றுவரும் எலிமினேட்டர் 2ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் வீசிய போட்டியின் மூன்றாவது ஓவரில் 25 ரன்கள் வழங்கினார்.

ஆஸ்திரேலிய கேப்டனான கம்மின்ஸ் ஓவரில் 1, 4, வைட், 6, 6, 6, 1 என அடித்து நொறுக்கப்பட்டது. கம்மின்ஸ் ஓவரில் சூர்யவன்ஷி ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து அசத்தினார்.

இந்தப் போட்டியில் 16 பந்துகளில் அரைசதம் அடித்த வைபவ் சூர்யவன்ஷி 59* ரன்களுடன் விளையாடி வருகிறார். 5 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 74 ரன்கள் குவித்துள்ளது.

Summary

Suryavanshi Smashes a Rapid Half-Century, Hitting a Hat-trick of Sixes in Pat Cummins' Over!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.