ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரானப் போட்டியில் முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் இன்று நடைபெற்று வரும் கடைசி லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தில்லி கேபிடல்ஸ் முதலில் விளையாடியது.
கே.எல்.ராகுல் அரைசதம்; ஆறுதல் வெற்றி யாருக்கு?
முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் எடுத்துள்ளது.
தில்லி கேபிடல்ஸ் அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் அரைசதம் கடந்து அசத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் அதிகபட்சமாக 30 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் அக்ஷர் படேல் 39 ரன்களும், டேவிட் மில்லர் 28 ரன்களும் எடுத்தனர். சஹில் பரேக் 24 ரன்கள், அபிஷேக் போரெல் 22 ரன்கள் எடுத்தனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய் சௌரப் துபே 4 ஓவர்களில் 28 ரன்களை விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அனுகுல் ராய், சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்குகிறது.
தில்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்ட நிலையில், ஆறுதல் வெற்றியுடன் இந்த ஐபிஎல் தொடரை நிறைவும் செய்யும் முனைப்பில் இரண்டு அணிகளும் விளையாடுகின்றன.
Summary
In the IPL match against the Kolkata Knight Riders, the Delhi Capitals, batting first, scored 203 runs for the loss of 5 wickets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சு; பிளே ஆஃப் செல்வதற்கு வாய்ப்பிருக்கிறதா?

ஃபின் ஆலன், அங்க்ரிஷ் ரகுவன்ஷி அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு 248 ரன்கள் இலக்கு!

பதும் நிசங்கா அரைசதம்; கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு 143 ரன்கள் இலக்கு!

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக கேகேஆர் பந்துவீச்சு!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை


