பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நம்பிக்கை, அதீத நம்பிக்கை... டெவால்டு பிரெவிஸுக்கு எம்.எஸ். தோனி பகிர்ந்த அறிவுரை!

டெவால்டு பிரெவிஸுக்கு எம்.எஸ். தோனி பகிர்ந்த அறிவுரை குறித்து...

News image

டெவால்டு பிரெவிஸ், எம்.எஸ். தோனி. - படம்: எக்ஸ் / சிஎஸ்கே

Updated On :20 மே 2026, 6:27 pm IST

முன்னாள் சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ். தோனி தற்போதைய வீரர் டெவால்டு பிரெவிஸுக்கு நம்பிக்கை, அதீத நம்பிக்கை குறித்து அறிவுரை வழங்கியுள்ளார்.

கடந்த சீசனில், மாற்று வீரராக சிஎஸ்கே அணியில் இணைந்த தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டெவால்டு பிரெவிஸ் (23 வயது) முக்கியமான மிடில் ஆர்டர் பேட்டராக மாறியுள்ளார்.

கடந்த சீசனில் மொத்தமாக 6 போட்டிகளில் விளையாடிய அவர் 225 ரன்கள் குவித்தார். 180 ஸ்டிரைக் ரேட்டுடன் 37.50 சராசரியுடன் விளையாடியிருந்தார். தற்போதைய சீசனில் கடைசி ஆட்டத்தைத் தவிர மற்ற போட்டிகளில் மோசமாகவே விளையாடியுள்ளார்.

சிஎஸ்கே அணி கிட்டதட்ட பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தா தோல்வியுற்று சிஎஸ்கே தனது கடைசி போட்டியில் வென்றால், ஒரு வாய்ப்பிருக்கிறது.

சிஎஸ்கே தனது கடைசி போட்டியில் குஜராத்தை எதிர்த்து நாளை (மே.21) விளையாடவிருக்கிறது. இந்த நிலையில், ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில் டெவால்டு பிரெவிஸ் தோனி குறித்து கூறியிருப்பதாவது:

எனது முதலாமாண்டு ஐபிஎல் போட்டியின்போது நான் அப்போது சென்னை அணியில் இல்ல்லாதபோது எம்.எஸ். தோனி எனக்கு மிகச்சிறந்த அறிவுரை ஒன்றை வழங்கினார். ’உனக்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. ஒன்று அதீத நம்பிக்கை, மற்றொன்று நம்பிக்கை. அதில் நீ அதிகமாக நம்பிக்கையின் பக்கம் இருக்க வேண்டும்’ எனக் கூறினார். அந்த அறிவுரை எனக்கு மனதில் அப்படியே தங்கிவிட்டது என பிரெவிஸ் கூறினார்.

பேட்டிங்கில் சரியாக விளையாடாவிட்டாலும் ஃபீல்டிங்கில் அதிகமான கேட்ச்சுகளை எடுத்து பிரெவிஸ் அசத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Overconfidence and confidence MS Dhoni advice to Dewald Brevis

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.