பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

17 சராசரியுடன் விளையாடும் சூர்யகுமார் யாதவ்..! இந்திய டி20 அணியில் இருந்து நீக்கப்படுவாரா?

ஐபிஎல் தொடரில் மோசமான ஃபார்மில் இருக்கும் இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் குறித்து...

News image

ஆட்டமிழந்து வெளியேறிய சூர்யகுமார் யாதவ். - படம்: ஏபி

Updated On :20 மே 2026, 8:25 pm IST

இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் மோசமான ஃபார்மில் தொடர்ந்து வருகிறார். கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்துவரும் மும்பை அணி 7 ஓவர்களில் 50/4 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 6 பந்துகளில் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த சீசனில் மொத்தமாக 12 போட்டிகளில் சூர்யகுமார் 210 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

இந்த சீசனில் சூர்யகுமார் யாதவ், 0 (1), 12 (7), 21 (12), 5 (5), 36 (30), 15 (10), 0 (1), 33 (22), 6 (3), 51 (36), 16 (8), 15 (5) ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

ஒரே ஒரு அரைசதம் அடித்த சூர்யகுமார் 2 முறை ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். சராசரி 17.50 உடன் விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா அல்லது மோசமான ஃபார்மில் இருக்கும் சூர்யகுமாருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Summary

Indian T20 team captain Suryakumar Yadav poor form in IPL 2026 Season average of 17

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.