பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் தோனி விளையாடுகிறாரா? அஸ்வின் கூறுவதென்ன?

சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிராக சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி விளையாடுவார் எனக் கூறப்படுகிறது.

News image

மகேந்திர சிங் தோனி - படம் | சென்னை சூப்பர் கிங்ஸ் (எக்ஸ்)

Updated On :18 மே 2026, 3:44 pm IST

சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிராக சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி விளையாடுவார் எனக் கூறப்படுகிறது.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் இன்று (மே 18) நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. லக்னௌவுக்கு எதிராக கடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வி சன்ரைசர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தை சிஎஸ்கேவுக்கு ஏற்படுத்தியுள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான இன்றையப் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த சீசனில் சேப்பாக்கம் திடலில் விளையாடும் கடைசிப் போட்டியாகும். காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடாத எம்.எஸ்.தோனி சன்ரைசர்ஸுக்கு எதிரான இன்றையப் போட்டியில் விளையாடுவார் எனக் கூறப்படுகிறது. மேலும், இது தோனியின் கடைசி ஐபிஎல் போட்டியாகவும் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

ரவிச்சந்திரன் அஸ்வின் (கோப்புப் படம்)

ரவிச்சந்திரன் அஸ்வின் (கோப்புப் படம்)

இந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான இன்றையப் போட்டியில் தோனி விளையாடுவார் என நம்புவதாக சிஎஸ்கே முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது யூடியூப் சேனலில் பேசியதாவது: சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான இன்றையப் போட்டியில் எம்.எஸ்.தோனி விளையாடுவார் எனத் தோன்றுகிறது. இந்தப் போட்டியைக் காண நிறைய பேர் வருவார்கள். அவர் விளையாடுவாரா? மட்டாரா? என்பது யாருக்குத் தெரியும். ஆனால், குறைந்தது அவர் ஆடுகளத்துக்கு வருவார் என நினைக்கிறேன். என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

இன்றையப் போட்டியில் எம்.எஸ்.தோனி விளையாடும் பட்சத்தில், பிரசாந்த் வீரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்கப்பட்டு, தோனியை இம்பாக்ட் வீரராக கொண்டுவர அதிகம் வாய்ப்பிருக்கிறது. தோனி பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என நான் நினைக்கவில்லை. இம்பாக்ட் வீரர்கள் தெரிவில் அவர் பெயர் இடம்பெற வாய்ப்பிருக்கிறது என்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு சிஎஸ்கே அதன் கடைசி இரண்டு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

It is reported that Mahendra Singh Dhoni will play in today's match against Sunrisers Hyderabad at Chepauk.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.