பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியா? அல்லது இன்ஜுரி கிங்ஸ் அணியா? ரசிகர்கள் கண்டனம்!

காயத்தினால் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறும் சிஎஸ்கே வீரர்கள் குறித்து...

News image

காயத்தினால் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறும் சிஎஸ்கே வீரர்கள். - படங்கள்: எக்ஸ் / சிஎஸ்கே

Updated On :14 மே 2026, 1:25 pm IST

நடப்பு சீசனில் சிஎஸ்கே அணியில் பலரும் காயத்தினால் வெளியேறுவது, சமூக வலைதளத்தில் ரசிகர்கள், “இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியா? அல்லது இன்ஜுரி கிங்ஸ் அணியா?” என்ற கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.

நேற்றிரவு (மே.13) சிஎஸ்கேவின் ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டன் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக பிரிட்டன் செல்கிறார் சென்ற செய்தி வெளியாகி சிஎஸ்கே ரசிகர்களை வருத்தமடையச் செய்தது.

இந்த சீசனில் மிகவும் தேவையான நேரத்தில் விக்கெட் எடுத்து தருபவராக ஜேமி ஓவர்டன் இருந்தார். தற்போது அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால், ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருக்கிறார்கள்.

சென்னை அணி பிளே ஆஃப் செல்ல மீதமிருக்கும் 3 போட்டிகளில் குறைந்தபட்சம் 2 போட்டிகளில் வெல்ல வேண்டிய நிலையில், இந்த காயம் காரணத்தினால் ஏற்படும் மாற்றங்கள் ரசிகர்களிடம் நம்பிக்கையைக் குறைத்துள்ளது.

சிஎஸ்கே ரசிகர்கள், முன்னாள் வீரர் அஸ்வின் சிஎஸ்கேவின் மருத்துவக் குழுவை விமர்சித்து வருகிறார்கள். இதுவரை சிஎஸ்கே அணியில் காயத்தினால் பாதிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்:

நாதன் எல்லீஸ் - சீசன் தொடங்கும் முன்பே காயத்தினால் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறினார்.

கலீல் அகமது - பவர்பிளேவில் சிறப்பாக பந்துவீசிக்கொண்டிருந்த கலீல் அகமது தசைப் பிடிப்பு காரணமாக தொடரிலிருந்து வெளியேறினார்.

ஆயுஷ் மாத்ரே - சிறப்பாக பேட்டிங் செய்துகொண்டிருந்த இவர் தசைப் பிடிப்பு காரணமாக தொடரிலிருந்து வெளியேறினார்.

ராமகிருஷ்ண கோஷ் - ஆல்ரவுண்டரான இவர் ஒரு போட்டியில் விளையாடி இந்திய கேப்டன் சூர்யகுமாவர் யாதவை விக்கெட் எடுத்தார். அந்தப் போட்டிக்குப் பிறகு காயம் காரணமாக வெளியேறினார்.

டெவால்டு பிரெவிஸ் - முதல் 3 போட்டிகளில் காயத்தினால் விளையாடவில்லை.

ஸ்பென்சர் ஜான்சன் - ஐபிஎல் தொடர் பாதிவரை காயம் காரணமாக விளையாடவில்லை.

எம்.எஸ். தோனி - காயம் காரணமாக இதுவரை ஒரு போட்டியில் விளையாடாமல் இருக்கிறார்.

ஜேமி ஓவர்டன் - தொடையில் ஏற்பட்ட காயத்தினால் ஓவர்டன் பிரிட்டனுக்குத் திரும்பியுள்ளார். இனிமேல் ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Is this chennai super kings or injury super kings fans irritating about csk medical teams

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.