தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து கடினமான சூழலில் இருந்தபோதும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை என கேமரூன் கிரீன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு அனைத்து அணிகளும் முனைப்பு காட்டி சிறப்பாக விளையாடி வருகின்றன. நடப்பு ஐபிஎல் தொடரின் தொடக்கம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. முதல் 6 போட்டிகளில் ஒரு வெற்றிகூட பெறாமல், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. ஆனால், தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
தில்லி அருண் ஜெட்லி திடலில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. மீதமுள்ள போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெறும் பட்சத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பிருக்கிறது.
இந்த நிலையில், தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து கடினமான சூழலில் இருந்தபோதும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை என கேமரூன் கிரீன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒருபோதும் நம்பிக்கையை இழந்ததாக நினைக்கவில்லை. இந்த தொடர் முழுவதும் எங்களிடம் நன்றாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. தோல்விகளிலிருந்து மீண்டு வெற்றிப் பாதைக்குத் திரும்ப நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம். இந்த தொடர் முழுவதும் எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். தில்லி கேபிடல்ஸுக்கு நேற்றையப் போட்டியிலும் அவர்கள் அபாரமாக செயல்பட்டனர். என்றார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது அடுத்தப் போட்டியில் வருகிற மே 13 ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Cameron Green has stated that the Kolkata Knight Riders never lost hope, even while facing a series of defeats and navigating through a difficult situation.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக கேகேஆர் பந்துவீச்சு!

ரன்கள் குவிக்கத் தவறும் கேமரூன் கிரீன்; முன்னாள் ஆஸி. கேப்டன் கூறுவதென்ன?

லக்னௌ அணிக்கு எதிராக கேமரூன் கிரீன் பந்துவீசுவார்!

கேமரூன் கிரீன் பந்துவீசவில்லையென்றால் கேகேஆர் என்ன செய்ய வேண்டும்?
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


