ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் ஃபார்ம் அவரது தலைமைப் பண்புக்கு உதவுவதாக சென்னை சூப்பர் கிங்ஸின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இளம் வீரர் கார்த்திக் சர்மா இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். ருதுராஜ் கெய்க்வாட் 67 ரன்களும், கார்த்திக் சர்மா 54 ரன்களும் எடுத்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில், ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் ஃபார்ம் அவரது தலைமைப் பண்புக்கு உதவுவதாக சென்னை சூப்பர் கிங்ஸின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒவ்வொரு போட்டியிலும் ருதுராஜ் கெய்க்வாட்டின் ஆட்டத்தில் முன்னேற்றத்தைப் பார்க்க முடிகிறது. ஆரம்பக் கட்டப் போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் ரன்கள் குவிக்கத் தடுமாறினார். ஆனால், கடந்த சில போட்டிகளாக அவர் நன்றாக ரன்கள் குவித்து வருகிறார். பேட்டிங்கில் அவர் ஃபார்முக்குத் திரும்பியுள்ளது, அவரது தலைமைப் பண்புக்கு மிகுந்த உதவியாக இருக்கிறது.
கடந்த இரண்டு போட்டிகளாக ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். பேட்டிங்கில் அவர் சிறப்பாக செயல்படுவது அவரது தலைமைப் பண்பிலும் வெளிப்படுகிறது. அது சென்னை சூப்பர் கிங்ஸுக்கு மிகவும் நேர்மறையான விஷயமாக உள்ளது என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Chennai Super Kings head coach Stephen Fleming has stated that Ruturaj Gaikwad's batting form is aiding his leadership qualities.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டி20 போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் புதிய சாதனை!

ருதுராஜ் கெய்க்வாட் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார்: அஸ்வின்

பேட்டிங்கில் முழுமையான சொதப்பல்; தலைமைப் பண்பிலும் தெளிவில்லாத ருதுராஜ் கெய்க்வாட்!

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ஃபார்முக்குத் திரும்புவாரா ருதுராஜ்?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


