சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சு பயிற்சியாளர் முத்தையா முரளிதரன் செய்தியாளர் சந்திப்பில், ”ஐபிஎல் என்பது கிரிக்கெட்டை வளர்ப்பதை விட வணிகத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருக்கிறது” எனக் கூறினார்.
முரளிதரனின் இந்தப் பேச்சு பேசுபொருளாகியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் 40 போட்டிகளில் 31 முறை 200+ ரன்கள் வருவதால் இவருடைய விமர்சனம் சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களில் 249/4 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் சன்ரைசர்ஸ் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
முன்னதாக, பஞ்சாப் கிங்ஸ் அணி 265 ரன்களை தில்லிக்கு எதிராக 6 பந்துகள் மீதமிருக்க சேஸ் செய்து வரலாறு படைத்தது. இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் சன்ரைசர்ஸ் அணியின் சுழல்பந்து பயிற்சியாளர் முத்தையா முரளிதரன் பேசியிருப்பதாவது:
சூர்யவன்ஷி ஆகாயத்துக்கு அடிக்கிறார். சிறிய ஆடுகளம் பிரச்னை இல்லை; ஆனால், ஆடுகளம் மிகவும் தட்டையாக இருப்பதாலேயே அதிக ரன்கள் குவிக்கிறார்கள். நடுநிலையான ஆடுகளத்தைக் கொடுத்தால் பார்வையாளர்களே சலிப்படைவார்கள்.
டி20 கிரிக்கெட் ரசிகர்கள் என்டர்டெயின்மென்ட்டை விரும்புகிறார்கள். அதனால், அவர்கள் பவுண்டரிகள், சிக்ஸர்கள் பார்க்க மட்டுமே விரும்புகிறார்கள். அதனால்தான், இந்தத் தொடரே அப்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்பாக்ட் விதியினால் கூடுதல் பேட்டர்கள் வருகிறார்கள்.
ஐபிஎல் தொடரால் கிரிக்கெட் வளர்ச்சியடையாது. இது ஒரு என்டர்டெயின்மென்ட். தற்போதைக்கு இது மிகப்பெரிய வணிகமாகவே இருக்கிறது. போட்டி சலிப்பாக சென்றால் விளம்பரதாரர்கள், பார்வையாளர்களை நீங்கள் இழக்கக் கூடும்.
அதிரடியான ஆட்டத்தை நாங்கள்தான் முதலில் ஆடினோம் கடந்த சீசனில். தற்போது அனைவரும் முயற்சிக்கிறார்கள். சவலான ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் தகவமைத்து பந்துவீச வேண்டும். இதற்கு கூடுதலாக இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகலாம் என்றார். ஆரஞ்ச் கேப், பர்ப்பிள் இரண்டிலுமே சன்ரைசர்ஸ் அணியின் வீரர்கள் டாப்3ல் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Summary
The IPL prioritizes commerce over the growth of cricket: Muttiah Muralitharan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எலிமினேட்டர் போட்டி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் பந்துவீச்சு!

மூவர் அரைசதம் விளாசல்; ஆர்சிபிக்கு 256 ரன்கள் இலக்கு!

ஆர்சிபிக்கு எதிராக சன்ரைசர்ஸ் பேட்டிங்; முதல் இரண்டு இடங்களுக்குள் நிறைவு செய்யுமா?

100% வெற்றி... சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அபாரமான சாதனை!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை


