ஐபிஎல் 2026 சீசனின் இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியும் வானகடேவில் இன்றிரவு மோதுகின்றன.
இரு அணிகளும் 35 போட்டிகளில் விளையாடியிருக்கும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 24 -11 என வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
வான்கடேவில் நடைபெற்ற இதுவரையிலான 12 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 10ல் வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
கடந்த 2024ல் கேகேஆர் 12 ஆண்டுகளாக வான்கடேவில் தோல்வியுற்று வந்த நிலையில் முதல்முறையாக வென்றது. இருப்பினும் 2025ல் மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.
இரு அணிகளுக்குமான போட்டிகளில் மும்பை அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 29 போட்டிகளில் 967 ரன்கள் குவித்துள்ளார். பந்துவீச்சில் கொல்கத்தாவின் சுனில் நரைன் 24 போட்டிகளில் 26 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார்.
மும்பையின் ஜஸ்ப்ரீத் பும்ரா 2022ல் 5 விக்கெட்டுகள் 10 ரன்கள் கொடுத்து சிறப்பான சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி: குயின்டன் டி காக் , ஹர்திக் பாண்டியா (கேப்டன்) ரோஹித் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஷெர்பானே ரதர்ஃபோர்ட், ஷர்துல் தாக்குர், கார்பின் போஷ், தீபக் சஹார், ஜஸ்ப்ரீத் பும்ரா, டிரென்ட் போல்ட், ராஜ் பாவா, ராபின் மின்ஸ், நமன் திர், ரியான் ரிக்கல்டன், ஏஎம் கசன்பர், மயங்க் மார்கண்டே, டேனிஷ் மாலேவார், அஸ்வனி குமார், முகமது சலாவுதீன் இசார், வில் ஜாக்ஸ், மிட்செல் சான்ட்னர், மயங்க் ராவத், அதர்வா அன்கோலேகர், ரகு சர்மா.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி: அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), டிம் சைஃபர்ட், ஃபின் ஆலன், கேமரூன் கிரீன், ரோவ்மேன் பவல், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரிங்கு சிங், ரமன்தீப் சிங், அனுகுல் ராய், சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி, கார்த்திக் தியாகி, உம்ரான் மாலிக், ராகுல் திரிபாதி, மணீஷ் பாண்டே, வைபவ் அரோரா, ரச்சின் ரவீந்திரன், முசரபானி ஆசீர்வாதம், நவ்தீப் சைனி, பிரசாந்த் சோலங்கி, தக்ஷ் கம்ரா, சர்தக் ரஞ்சன், தேஜஸ்வி தஹியா, சவுரப் துபே.
Summary
Will KKR put a halt to Mumbai Indians' dominance in IPL 2026?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடைசி இடத்துக்குக் கீழிறங்காமல் நூலிழையில் தப்பித்த மும்பை இந்தியன்ஸ்!

தொடர் தோல்விகளுக்கு மத்தியில் புதிய உலக சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ்!

மும்பைக்கு எதிராக சிஎஸ்கே பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள்!

கேகேஆர் அணியின் கிண்டல் பதிவுக்குப் பதிலளித்த மும்பை இந்தியன்ஸ்..! சாதனைக்குமேல் சாதனை!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


