எதிர்வரும் ஐபிஎல் சீசன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு மிகவும் சிறப்பான சீசனாக அமையப் போவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவரது தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பையை வென்று அசத்தியுள்ளது. டெஸ்ட் மற்றும் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட ரோஹித் சர்மா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு டி20 வடிவிலான போட்டியில் விளையாடவுள்ளார்.
இந்த நிலையில், எதிர்வரும் ஐபிஎல் சீசன் ரோஹித் சர்மாவுக்கு மிகவும் சிறப்பான சீசனாக அமையப் போவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்துள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் (கோப்புப் படம்)
இது தொடர்பாக அவரது யூடியூப் சேனலில் அவர் பேசியதாவது: எதிர்வரும் ஐபிஎல் சீசனில் ரோஹித் சர்மா மிகவும் அதிரடியாக விளையாடப் போகிறார் என தனிப்பட்ட விதத்தில் எனக்குத் தோன்றுகிறது. அவர் ஆண்டு முழுவதும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதில்லை. போதுமான அளவுக்கு அவருக்கு ஓய்வு கிடைத்துவிட்டது. தற்போது அவரது மனது மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கிறது. பார்ப்பதற்கு நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார்.
டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிரடியாக விளையாடுவதைப் போன்று, அவர் மீண்டும் ஐபிஎல் தொடரில் அதிரடியில் கலக்கப் போவதாக நினைக்கிறேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎல் தொடரில் அதிரடியில் மிரட்டிய ரோஹித் சர்மாவை நாம் மறந்திருக்க மாட்டோம். அவரது அதிரடியான ஆட்டத்தை மீட்டெடுப்பதற்கு மீண்டும் ஒரு சிறப்பான வாய்ப்பு அமைந்திருக்கிறது. எதிர்வரும் ஐபிஎல் சீசனை அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் அனுபவித்து விளையாடுவார் என நினைக்கிறேன். அவர் இந்த சீசனில் மும்பை அணிக்காக நம்ப முடியாத விதத்தில் அதிரடியாக விளையாடுவார் என்றார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் 7046 ரன்களுடன் ரோஹித் சர்மா இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Ravichandran Ashwin has said that the upcoming IPL season is going to be a very special season for former Indian captain Rohit Sharma.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரோஹித் சர்மா எப்போது விளையாடுவார்? மும்பை கேப்டன் பதில்!

அபிஷேக் சர்மா எளிதாக சதங்கள் விளாசுகிறார்: புஜாரா

ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வை அறிவித்தது ஏன்? ரகசியம் பகிர்ந்த அஸ்வின்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸின் பந்துவீச்சை நினைத்து இனி எதிரணிகள் அஞ்சாது: அஸ்வின்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


