ஐசிசியின் சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருதினை பாகிஸ்தான் வீரர் சாகிப்ஸதா ஃபர்ஹான் மற்றும் இந்திய வீராங்கனை அருந்ததி ரெட்டி வென்றுள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர், வீராங்கனைகளுக்கு ஐசிசி சார்பில் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறது. அதன் படி, பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரராக பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாகிப்ஸதா ஃபர்ஹான் மற்றும் சிறந்த வீராங்கனையாக இந்திய அணியின் அருந்ததி ரெட்டி இருவரும் தேர்வாகியுள்ளனர்.
அண்மையில் நிறைவடைந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் சாகிப்ஸதா ஃபர்ஹான் மிகவும் அபாரமாக விளையாடி ரன்கள் குவித்தார். ஒரே டி20 உலகக் கோப்பைத் தொடரில் இரண்டு சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். மேலும், டி20 உலகக் கோப்பைத் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற விராட் கோலியின் சாதனையையும் அவர் முறியடித்தார்.
அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய மகளிரணி விளையாடியது. இந்தத் தொடரில் இந்திய வீராங்கனை அருந்ததி ரெட்டி மிகவும் அபாரமாக பந்துவீசினார். முதல் டி20 போட்டியில் 4 விக்கெட்டுகளும், இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் தலா இரண்டு விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றினார்.
Summary
India medium pacer Arundhati Reddy was on Monday named the ICC Player of the Month for February for her fine performances in a T20I series in Australia.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு!

இம்பாக்ட் வீரர் விராட் கோலி!

சஞ்சு சாம்சனுக்கு சிறந்த வீரருக்கான ஐசிசி விருது!

இம்பாக்ட் வீரர் விதி இளம் வீரர்களுக்கான பொன்னான வாய்ப்பு: பிரப்சிம்ரன் சிங்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


