ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஜெர்ஸி எண் மாற்றம்? தோனி பகிர்ந்த பதிவினால் குழப்பம்!

சிஎஸ்கே அணியின் வீரர் எம்.எஸ். தோனி வெளியிட்ட விடியோ குறித்து...

News image
Updated On :17 மார்ச் 2026, 3:33 pm IST

ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்பாக எம்.எஸ். தோனி பகிர்ந்த முகநூல் பதிவினால் ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தோனி தனது ஜெர்ஸி எண் 7-லிருந்து 8-ஆக மாற்றப்போவதாக விடியோவில் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு 7 என்ற எண் மிகவும் உணர்ச்சிகரமானது. ஏனெனில், அது தோனியின் ஜெர்ஸி எண் என்பதால், எல்லாவற்றையும் 7 உடன் ஒப்பிட்டு பதிவிட்டு வருவார்கள்.

இந்திய அணிக்காக அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளையும் தோனி தனது தலைமையில் வென்று கொடுத்தார். ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச். 28ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.

தோனி பகிர்ந்த விடியோவில் எண் 7-லிருந்து 8-க்கு மாறுகிறேன். சில எண்கள் நம்மிடையே நின்றுவிடும். அப்படித்தான் 7 என்ற எண்ணும். ஆனால், இன்று 8ஆம் எண்ணுக்கு மாறுகிறேன். விரைவில் என்னவென்று தெரியும் எனக் கூறியுள்ளார்.

இது வெறுமனே எதாவது விளம்பரம் தொடர்பானதாக இருக்குமென கணிக்கப்படுகிறது. ஏனெனில், இது போல நிறைய முறை தோனி பகிர்ந்துள்ளதும் கவனிக்கத்தக்கது.

ஜூலை மாதம் 7ஆம் தேதி பிறந்ததால், 7 என்ற எண்ணை தேர்வு செய்ததாக தோனி முன்னதாகக் கூறியிருந்தார். கடந்த 2023ல் பிசிசிஐ எண் 7 இனி யாரும் பயன்படுத்த முடியாது எனக் கூறி அறிக்கை வெளியிட்டிருந்தது.

Summary

A video has created a storm on social media platforms ahead of the IPL 2026 season. The video shows MS Dhoni leaving out his iconic number 7 jersey. The video was shared on Facebook from Mahendra Singh Dhoni’s official account.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.