தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு... ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? என்ன சொல்கிறது நிர்வாகம்?

ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவது பற்றிப் பேசிய ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் அருண் தூமல்.

News image

எல்பிஜி சிலிண்டர்/ ஐபிஎல் கோப்பை - கோப்புப் படம்

Updated On :10 மார்ச் 2026, 3:21 pm IST

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்வியெழுந்த நிலையில் ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் அதுகுறித்து பதிலளித்துள்ளார்.

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் கடல்வழிப் போக்குவரத்துக்கான ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் சர்வதேச அளவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றன.

இந்தியாவிலும் வீட்டு உபயோக சிலிண்டருக்கு முன்னுரிமை கொடுக்கவும் சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் வணிக சிலிண்டர் விற்பனை நிறுத்தப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. தொடர்ந்து வணிகம் சார்ந்த நிறுவனங்கள் கவலை தெரிவித்து வருகின்றன.

பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களில் உணவகங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டிலும் பல உணவகங்கள் இதனால் மூடப்படு அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இம்மாத இறுதியில் தொடங்கவிருந்த நிலையில் அவை நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் அருண் தூமல், “இந்த சூழ்நிலையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இப்போது இதுபற்றி மேற்கொண்டு எதுவும் சொல்ல முடியாது. ஆனால், சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப முடிவுகளை எடுப்போம்” என்று தெரிவித்தார்.

ஐபிஎல் போட்டிகள் வருகிற மார்ச் 28 அன்று தொடங்கவுள்ள நிலையில், பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் அதற்கேற்றவாறு மாற்றங்களைச் செய்து போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட ஐபிஎல் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

மேலும், எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்ந்தால் அது ஐபிஎல் போட்டிகளை மட்டும் பாதிக்காமல் தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மக்களின் வாழ்க்கையையும் பாதிக்கக்கூடியது என்பதால் ஐபிஎல் நிர்வாகம் மற்றும் பிசிசிஐ இந்தப் போட்டிகளை நடத்துவது தொடர்பாக உடனடி முடிவை எடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

நடைபெற்று வரும் போரின் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு மட்டுமின்றி மற்ற நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களின் போக்குவரத்தும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. சமீபத்தில் டி20 உலகக் கோப்பை போட்டிகள் முடிந்து ஜிம்பாப்வே, தென் ஆப்ரிக்கா, மேற்கு இந்திய தீவுகள் உள்ளிட்ட அணியினர் இந்தியாவை விட்டு தங்கள் நாடுகளுக்கு உடனடியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

IPL GC chairman responded to questions about whether the IPL will be held this year due to gas shortages.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.