வங்கதேசத்து எதிரான கடைசி டி20 போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற மிட்செல் மார்ஷ், “நான் எப்படி இந்த விருதுக்குத் தேர்வானேன் எனத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை ஸ்பென்சர் ஜான்சனுக்குதான் இந்த விருது சென்றிருக்க வேண்டும்” எனக் கூறினார்.
சட்டோகிராமில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 109 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஸ்பென்சர் ஜான்சன் 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அடுத்து பேட்டிங் விளையாடிய ஆஸி. 11 ஓவர்களில் 112/3 ரன்கள் எடுத்து இலக்கை அடைந்தது.
இந்தப் போட்டியில் மிட்செல் மார்ஷ் 60 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார். போட்டிக்குப் பிறகு அவர் பேசியிருப்பதாவது:
3-0 என தொடரை வெல்வது சிறப்பானது. எங்களது வீரர்களை நினைத்து பெருமையாக இருக்கிறது. நாங்கள் சிறப்பாக பந்துவீசினோம்.
நான் எப்படி ஆட்ட நாயகன் விருதுக்குத் தேர்வானேன் எனத் தெரியவில்லை. ஸ்பென்சர் ஜான்சன் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகள் கொடுத்து 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அவர்தான் இங்கு இருந்திருக்க வேண்டும்.
மொத்தமாக, நாங்கள் ஆடுகளத்தை நன்கு புரிந்துகொண்டோம். தினமும் கற்றுக்கொள்கிறோம். இன்று பந்துவீச்சில் அற்புதமாக செயல்பட்டுள்ளோம். ஒருநாள் தொடரை இழந்து டி20 தொடரை முழுமையாக வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
Summary
I'm not sure how I got Man of the Match. I think Spencer Johnson should be up here says Mitchell Marsh
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலக சாதனையுடன் ஆட்ட நாயகன் விருது..! மெஸ்ஸியின் பேட்டி!

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து மிட்செல் மார்ஷ் விலகல்!

தன்னம்பிக்கை நாயகன்: சீசனில் முதல் பேட்டிங் வாய்ப்பிலேயே ஆட்ட நாயகன் விருதுவென்ற மணீஷ் பாண்டே!

ஆர்சிபியை வீழ்த்தியது எப்படி? ஆட்ட நாயகன் மிட்செல் மார்ஷ் பேட்டி!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை


