பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

இந்தியாவில் கிரிக்கெட் அகாடெமி தொடங்கும் முன்னாள் ஆஸி. கேப்டன்?

இந்தியாவில் கிரிக்கெட் அகாடெமி தொடங்க ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆர்வமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News image

மைக்கேல் கிளார்க் (கோப்புப் படம்)

Updated On :19 மணி நேரங்கள் முன்பு

இந்தியாவில் கிரிக்கெட் அகாடெமி தொடங்க ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆர்வமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க், ஹரியாணா மாநில முதல்வர் நயாப் சிங் சைனியை அவரது அதிகாரபூர்வ அரசு இல்லத்தில் சந்தித்து இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான விளையாட்டுத் துறை வளர்ச்சி குறித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது மைக்கேல் கிளார்க் பேசியதாவது: ஹரியாணா பல திறமையான வீரர், வீராங்கனைகளை உருவாக்கியுள்ளது. இங்கு திறமையான வீரர், வீராங்கனைகளுக்கு பஞ்சம் கிடையாது. ஹரியாணா மாநிலத்தால் இனி வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகமான தரமான வீரர், வீராங்கனைகளை உருவாக்க முடியும் என நம்புகிறேன்.

ஆஸ்திரேலியாவில் உள்ள இளம் வீரர்களை இந்தியாவுக்கு நான் அழைத்து வந்து கொண்டிருக்கிறேன். இந்தியாவும் இளம் வீரர்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி அவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகளை உருவாக்குகிறது. இது போன்று இரண்டு நாடுகளுக்கு இடையே வீரர்களை பரிமாற்றிக் கொள்வது சர்வதேச அளவில் அவர்களுக்கு சிறப்பான அனுபவம் கிடைக்க உதவியாக இருக்கும். எதிர்காலத்தில் ஹரியாணாவில் கிரிக்கெட் அகாடெமி அமைப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறேன் என்றார்.

கடந்த 2011 மற்றும் 2015 ஆம் ஆண்டு இடைவெளியில் மைக்கேல் கிளார்க் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Reports indicate that former Australian captain Michael Clarke is keen on starting a cricket academy in India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.