சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுதான் மிகவும் முக்கியம்; அறிமுக வீரர் மானவ் சுதர் கூறியதென்ன?

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அறிமுக வீரர் மானவ் சுதர் டெஸ்ட் கிரிக்கெட் குறித்து பேசியுள்ளார்.

News image

படம் | AP

Updated On :8 ஜூன் 2026, 7:32 pm IST

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அறிமுக வீரர் மானவ் சுதர் டெஸ்ட் கிரிக்கெட் குறித்து பேசியுள்ளார்.

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நியூ சண்டீகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக இடதுகை சுழற்பந்துவீச்சாளரான மானவ் சுதர் களமிறங்கினார். அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மேலும், அறிமுகப் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருதையும் வென்று அசத்தினார்.

இந்த நிலையில், தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படுவது மற்றும் பொறுமை இந்த இரண்டும்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் முக்கியம் என்பதை கற்றுக்கொண்டதாக மானவ் சுதர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படுவதுதான் முக்கியம் என்பதுதான் நான் கற்றுக்கொண்ட மிகப் பெரிய பாடம். தொடர்ச்சியாக சரியான இடத்தில் பந்துவீச வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அது மிகவும் முக்கியம் என நினைக்கிறேன். டெஸ்ட் வடிவிலான போட்டிக்கு அதிக அளவிலான பொறுமை தேவை.

தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படுவது, பொறுமையாக இருப்பது இந்த இரண்டையும் நான் கற்றுக் கொண்டேன். இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பது என்னுடைய கனவு. அதனால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்டது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

Summary

Debut player Manav Suthar, who displayed exceptional bowling in the Test match against Afghanistan, has spoken about Test cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.