ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்து ஆர்ஞ்சு கேப் வென்ற மிக இளம் வீரர் என்ற சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
குஜராத் மாநிலம், அகமதாபாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் 2026 இறுதி ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது. தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று ஆர்சிபி அணி சாதனை படைத்துள்ளது.
இந்தப் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக 42 பந்துகளில் 75 ரன்கள் குவித்த விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இந்த நிலையில், ஐபிஎல் 2026 தொடர் முழுவதும் அதிக ரன்கள் குவித்து ஆர்ஞ்சு கேப்பை வைபவ் சூர்யவன்ஷி (776 ரன்கள்) வென்றுள்ளார். மேலும், சூப்பர் ஸ்டிரைக்கர் விருதையும் வென்றுள்ளார்.
இதுமட்டுமின்றி, அதிக சிக்ஸர்கள் (72) வீரர், இந்த சீசனில் அதிவேக சதம் (36 பந்துகளில்) அடித்த வீரர் என்ற சாதனையையும் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
அதிக ரன்கள்
1. வைபவ் சூர்யவன்ஷி (ராஜஸ்தான் ராயல்ஸ்) - 776 ரன்கள்
2. ஷுப்மன் கில் (குஜராத் டைட்டன்ஸ்) - 732 ரன்கள்
3. சாய் சுதர்சன் (குஜராத் டைட்டன்ஸ்) - 722 ரன்கள்
4. விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) - 675 ரன்கள்
5. ஹென்ரிச் கிளாசென் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) - 624 ரன்கள்
மேலும், இந்த சீசனில் அதிகர் ஃபோர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சாய் சுதர்சன் (75) முதலிடத்தில் உள்ளார்.
Summary
IPL 2026: Vaibhav Suryavanshi Sets a Record! Top 5 Highest Run-Scorers!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
என்னுடைய இலக்கை ஐபிஎல் தொடங்கும் முன்பே எழுதி வைத்துவிட்டேன்: வைபவ் சூர்யவன்ஷி

ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை!

டி20 போட்டியில் 200 ரன்கள் அடிக்க வேண்டும்: வைபவ் சூர்யவன்ஷி

கிறிஸ் கெயில் சாதனையை முறியடிப்பாரா வைபவ் சூர்யவன்ஷி?
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

