பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

ரிஷப் பந்த்திடம் எப்போதும் அறிவுரை கேட்பேன்: துருவ் ஜுரெல்

ரிஷப் பந்த்திடம் எப்போதும் அறிவுரை கேட்பேன் என இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான துருவ் ஜுரெல் தெரிவித்துள்ளார்.

படம் | பிசிசிஐ

Published On :24 ஆகஸ்ட் 2026, 10:20 pm IST

ரிஷப் பந்த்திடம் எப்போதும் அறிவுரை கேட்பேன் என இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான துருவ் ஜுரெல் தெரிவித்துள்ளார்.

இந்தியா - இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நேற்று (ஆகஸ்ட் 23) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 503 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 117 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து துருவ் ஜுரெல் 115* ரன்கள், ரிஷப் பந்த் 63 ரன்கள், கேப்டன் ஷுப்மன் கில் 50 ரன்கள் எடுத்தனர்.

துருவ் ஜுரெல் மற்றும் ரிஷப் பந்த் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து 112 ரன்கள் சேர்த்தனர்.

இந்த நிலையில், ரிஷப் பந்த்துடன் இணைந்து பேட்டிங் செய்த அனுபவம் குறித்து துருவ் ஜுரெல் பேசியுள்ளார்.

இது தொடர்பாக இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடைந்த பிறகு அவர் பேசியதாவது: ரிஷப் பந்த் மிகவும் அபாயகரமான வீரர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவர் இந்திய அணிக்காக ஆஸ்திரேலியாவிலும், இங்கிலாந்திலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் அணியில் இருக்கும்போது, அவரிடம் மட்டுமே அறிவுரைகளை கேட்பேன். ஏனெனில், அவரிடம் நிறைய அனுபவம் இருக்கிறது.

ரிஷப் பந்த்துடன் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடுவது மிகவும் சிறப்பான உணர்வைத் தந்தது. அவரைப் போன்று என்னால் விளையாட முடியாது. என்னுடைய ஆட்டம் மாறுபட்டதாக இருக்கும். நானும் ரிஷப் பந்த்தும் விக்கெட் கீப்பர்கள் என்பதாலும், இருவரும் மிடில் ஆர்டரில் விளையாடுபவர்கள் என்பதாலும் அவரிடம் எப்போதும் அறிவுரைகளைக் கேட்பேன் என்றார்.

Summary

Dhruv Jurel, one of the young players of the Indian team, has stated that he will always seek advice from Rishabh Pant.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.