பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: அதிக ரன்கள் குவித்து ஷுப்மன் கில்லை முந்திய ரிஷப் பந்த்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து ரிஷப் பந்த் கேப்டன் ஷுப்மன் கில்லை முந்தியுள்ளார்.

Rishabh Pant, Shubman Gill

ரிஷப் பந்த், ஷுப்மன் கில் - படம் | AP

Published On :24 ஆகஸ்ட் 2026, 7:55 pm IST

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து ரிஷப் பந்த் கேப்டன் ஷுப்மன் கில்லை முந்தியுள்ளார்.

இந்தியா - இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நேற்று (ஆகஸ்ட் 23) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 503 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 117 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து துருவ் ஜுரெல் 115* ரன்கள், ரிஷப் பந்த் 63 ரன்கள், கேப்டன் ஷுப்மன் கில் 50 ரன்கள் எடுத்தனர்.

முதல் இன்னிங்ஸ்ல் 63 ரன்கள் எடுத்ததன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்துள்ள கேப்டன் ஷுப்மன் கில்லை ரிஷப் பந்த் முந்தியுள்ளார். இதுவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 42 போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பந்த் 2,948 ரன்கள் எடுத்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 42 போட்டிகளில் விளையாடியுள்ள கேப்டன் ஷுப்மன் கில் 2917 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இந்த வரிசையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா 2,716 ரன்களுடன் (40 போட்டிகளில்) மூன்றாவது இடத்தில் உள்ளார். 50 போட்டிகளில் 2,675 ரன்களுடன் ரவீந்திர ஜடேஜா நான்காவது இடத்திலும், 46 போட்டிகளில் 2,617 ரன்களுடன் விராட் கோலி ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

Summary

Rishabh Pant has surpassed captain Shubman Gill by scoring the most runs in the Test matches played during the World Test Championship cycle.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.