நடப்பு ஐபிஎல் தொடரில் பவர்பிளேவில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றி வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா அசத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா 4 ஓவர்களில் 25 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
நேற்றையப் போட்டியில் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் பவர்பிளேவில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரராக அவர் மாறியுள்ளார். பவர்பிளேவில் அவர் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளேவில் பந்துவீச்சாளர் ஒருவர் வீழ்த்திய இரண்டாவது அதிகபட்ச விக்கெட்டுகள் இதுவாகும். இதற்கு முன்பாக, கடந்த 2022 ஆம் ஆண்டு 10 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டது இந்த வரிசையில் முதலிடத்தில் உள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் பவர்பிளேவில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்
ககிசோ ரபாடா - 9 விக்கெட்டுகள்
ஜோஃப்ரா ஆர்ச்சர் - 8 விக்கெட்டுகள்
முகமது ஷமி - 6 விக்கெட்டுகள்
Summary
Fast bowler Kagiso Rabada has impressed in the ongoing IPL season by taking the most wickets during the Powerplay.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐபிஎல் 2026: பர்பிள் கேப் வென்ற ரபாடா! சிறந்த பந்துவீச்சாளர்கள் யார்யார்?

ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை!

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்த கே.எல்.ராகுல்!

பொறுமையும் எளிமையும்... ஆட்ட நாயகன் விருது வென்ற ககிசோ ரபாடாவின் பேட்டி!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை


