தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனா
/

சிஎஸ்கே வீரர் முகேஷ் சௌதரியின் தாயார் காலமானார்!

சிஎஸ்கே வீரர் முகேஷ் சௌதரியின் தாயார் காலமானாது குறித்து...

News image

முகேஷ் சௌதரி. - படம்: சிஎஸ்கே

Updated On :23 ஏப்ரல் 2026, 1:17 pm IST

சிஎஸ்கே அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகேஷ் சௌதரியின் தாயார் காலமானார் என்ற செய்தி வெளியாகி சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

வான்கடே திடலில் இன்றிரவு மும்பை இந்தியன்ஸ் அணியும் சிஎஸ்கே அணியும் பலப்பரீட்சை செய்யவிருக்கின்றன. இதில் வெல்லும் அணி பிளே ஆப்ஸுக்கான வாய்ப்பை தக்கவைக்கும் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.

சிஎஸ்கே அணியில் முகேஷ் சௌதரி கடந்த போட்டியில் விளையாடி 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

இந்த நிலையில், அவரது தாயார் பிரேம் தேவி செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். கடந்த ஓராண்டாக மும்பையில் டாடா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்தார். இறப்புச் செய்தி தெரிய வந்ததும் அணியில் இருந்து முகேஷ் சௌதரி புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக தோனி மருத்துவமனைக்குச் சென்று முகேஷ் சௌதரியின் தாயாரைப் பார்த்து குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்தார். தற்போது, சிஎஸ்கே நிர்வாகம் பிரேம் தேவிக்கு தங்களது அஞ்சலியை தெரிவித்துள்ளது.

Summary

The CSK family mourns the passing of Mukesh Choudhary’s mother.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.