ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

விஸ்டன் விருதுகள்: மிட்செல் ஸ்டார்க், தீப்தி சர்மாவுக்கு கௌரவம்! 5ல் 4 இந்தியர்கள் தேர்வு!

மதிப்புமிக்க விஸ்டன் விருதுகளுக்குத் தேர்வான வீரர்கள் குறித்து...

News image

மிட்செல் ஸ்டார்க், தீப்தி சர்மா. - படங்கள்: எக்ஸ் / விஸ்டன் கிரிக்கெட்.

Updated On :14 ஏப்ரல் 2026, 6:46 pm IST

உலகின் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கான விஸ்டன் லீடிங் கிரிக்கெட்டருக்கான ஆடவருக்காக மிட்செல் ஸ்டார்க்கும் மகளிருக்காக தீப்தி சர்மாவும் வென்று அசத்தியுள்ளனர்.

கிரிக்கெட் உலகில் விஸ்டன் விருதுகள் 1864 முதல் வழங்கப்பட்டு வருகின்றன. கிரிக்கெட்டின் பைபிள் எனப் புகழப்படும் இந்த விருதுகளுக்கு நன்மதிப்புகள் இருக்கின்றன.

உலக அளவில் டி20, டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது. மொத்தம் 5 விருதுகளில் இந்தியர்கள் நால்வர் தேர்வாகி அசத்தியுள்ளார்கள்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிட்செல் ஸ்டார்க் 11 டெஸ்ட்டில் 55 விக்கெட்டுகள் எடுத்தார். ஆஷஸ் தொடரில் தொடர் நாயகன் விருது வென்றும் அசத்தினார்.

தீப்தி சர்மா ஒருநாள் உலகக் கோப்பையில் 200+ ரன்கள், 22 விக்கெட்டுகள் எடுத்த ஒரே வீராங்கனையாக சாதனை படைத்தார். இந்த உலகக் கோப்பையில் தொடர் நாயகி விருது வென்று அசத்தினார்.

இந்தாண்டின் சிறந்த ஐந்து கிரிக்கெட் வீரர்களில் இந்தியாவைச் சேர்ந்த நால்வர் தேர்வாகியுள்ளார்கள்.

டெஸ்ட்டில் அசத்திய ஷுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பந்த், முகமது சிராஜ் தேர்வாகி அசத்தியுள்ளார்கள். இவர்களுடன் இங்கிலாந்து வீரர் ஹசீப் ஹமீத் ஐந்தாவது வீரராக தேர்வாகியுள்ளார்.

Summary

Mitchell Starc, Deepti Sharma named as Wisden's Leading Cricketers in the World.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.