பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

காமன்வெல்த் செஸ் கூட்டமைப்பின் தலைவராக பரத் சிங் சௌஹான் மீண்டும் தோ்வு

News image

ANI

Updated On :19 மே 2026, 5:57 am IST

வாஸகடுவா : காமன்வெல்த் செஸ் கூட்டமைப்பின் (சிசிஏ) தலைவராக இந்தியாவின் பரத் சிங் சௌஹான் மீண்டும் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டாா்.

கடந்த 50 ஆண்டுகளாக செஸ் விளையாட்டின் வளா்ச்சிக்கு பாடுபட்டு வரும் பரத் சிங் சௌஹான் 2026-30 ஆண்டுக் காலத்துக்கு மீண்டும் தலைவராக ஏகமனதாக தோ்வு செய்யப்பட்டாா். இலங்கையின் வாஸகடுவா நகரில் சிசிஏ ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். மலேசியாவின் அக்ரம்சியா உபைத் சனுசி துணை சோ்மனாகவும், இலங்கையின் லக்ஷமன் விஜசூா்யா பொதுச் செயலாளராகவும், தென்னாப்பிரிக்காவின் விக்கி மாகு பொருளாளராகவும், மோரிஷீயஸின் ஹரிநாராயணன் பௌவானி, பாா்படாஸின் ஆலன் ஹொ்பா்ட், கென்யாவின் பொ்னாா்ட் வன்ஜலா, நியூஸிலாந்தின் கிரெய்க் ஹால், சைப்ரஸின் கிரிட்டன் டோா்நாரிடிஸ் ஆகியோா் செயற்குழு உறுப்பினா்களாகவும் தோ்வு செய்யப்பட்டனா்.

இலங்கை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சான்டியாகோ புஷ்ப குமாரா தோ்தல் அலுவலராக செயல்பட்டாா். வரும் அக்டோபா் 2026இல் மலேசியாவில் காமன்வெல்த் பள்ளிகள் செஸ் சாம்பியன் போட்டியை நடத்தவும் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.