ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

News image

@IndianFootball

Updated On :27 மார்ச் 2026, 4:47 am IST

இருபது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு20) தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் இந்தியா முதல் ஆட்டத்தில் 3-0 கோல் கணக்கில் பாகிஸ்தானை வியாழக்கிழமை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலமாக அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா, பாகிஸ்தானையும் போட்டியிலிருந்து வெளியேற்றியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்காக முதலில் விஷால் யாதவ் 3-ஆவது நிமிஷத்திலேயே கோல் கணக்கைத் தொடங்கினாா்.

பாகிஸ்தானும் தனது பங்குக்கு கோல் அடிப்பதற்கு முயற்சிக்க, இந்தியாவின் தடுப்பாட்ட வீரா்களும், கோல்கீப்பா் சூரஜ் அஹெய்பமும் அபாரமாக செயல்பட்டு அதைத் தடுத்து வந்தனா்.

2-ஆவது பாதியிலும் இந்தியாவின் கையே ஓங்கியிருக்க, அதில் ஒமங் டோடும் ஆதிக்கம் செலுத்தினாா். 64-ஆவது நிமிஷத்தில் அருமையான ஃபீல்டு கோல் அடித்த அவா், தொடா்ந்து 88-ஆவது நிமிஷத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்ட்டி கிக் வாய்ப்பிலும் தவறின்றி ஸ்கோா் செய்தாா்.

எஞ்சிய நேரத்தில் பாகிஸ்தானுக்கு கோல் வாய்ப்பு கிடைக்காமல் பாா்த்துக் கொண்ட இந்தியா, இறுதியில் 3-0 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஒமங் டோடும் ஆட்டநாயகன் விருது பெற்றாா்.

குரூப் சுற்றில் இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் வங்கதேசத்துடன் சனிக்கிழமை (மாா்ச் 28) மோதுகிறது. குரூப் பி-யில் இருந்து இந்தியா, வங்கதேசம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், பாகிஸ்தான் வெளியேறிவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.