தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குரு அதிசார பெயர்ச்சி நாளை எந்த நேரம்?

குரு அதிசார பெயர்ச்சி நாளை நிகழவுள்ள நிலையில், யாருக்கெல்லாம் நன்மை என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்...

Guru Adhisara Peyarchi

குரு அதிசாரப் பெயர்ச்சி - file photo

Published On :30 அக்டோபர் 2026, 2:59 pm IST

ஜோதிட சாஸ்திரத்தில் நவக்கிரகங்களின் சுபக்கிரகம் என்று போற்றப்படுபவர் குரு பகவான். தேவர்களின் குருவான இவர், பொதுவாக ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர ஓராண்டுக் காலம் எடுத்துக்கொள்வார். ஆனால், சில காலங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிசார நிலையில் பயணிப்பதும் உண்டு.

குரு அதிசார பெயர்ச்சி என்றால் என்ன?

ஜோதிடத்தில் குரு பகவான் தனது இயல்பான வேகத்தை விட வேகமாக நகர்ந்து ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு முன்னரே செல்வதை அதிசார பெயர்ச்சி என்கிறோம். அவ்வாறு அதிசாரமாக இயங்கும்போது, ஒரேயாண்டில் இரண்டு முறை ராசி மாற்றம் நிகழ்வுகளும் நடைபெறும்.

குருவின் காரகத்துவம்

குரு பகவான் ஞானம், கல்வி, திருமணம், குழந்தைப்பேறு, செல்வம், நல்வாழ்வு ஆகியவற்றுக்கு உரியவர்.

குரு அதிசார பெயர்ச்சி எப்போது?

தற்போது கடக ராசியில் சஞ்சரித்து வரும் குரு பகவான், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி நாளை அக்டோபர் 31 (சனிக்கிழமை) அன்று பிற்பகல் 12.02-க்கு குருபகவான் அதிசார பெயர்ச்சியாக உச்ச வீடான கடக ராசியிலிருந்து நட்பு வீடான சிம்ம ராசிக்கு பிரவேசிக்க உள்ளார்.

85 நாள்கள் ஒரே ராசியில்..

சிம்ம ராசிக்குப் பெயர்ச்சியாகும் குருபகவான் சுமார் 85 நாள்கள் அதாவது 2027 ஜனவரி 24 தை மாதம் 10-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 1.32 வரை குரு பகவான் சிம்ம ராசியில் அதிசாரமாகப் பயணித்துவிட்டு அதற்குப்பின் வக்ர கதியில் கடக ராசிக்குத் திரும்புகிறார்.

இந்த அதிசாரப் பெயர்ச்சியால் அனைத்து ராசிகளுக்கும் உரிய பலன்கள், மாற்றங்கள், திருப்பங்கள் ஏற்படும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. குறிப்பாக இந்த ஐந்து ராசிகள் குருவின் அதிசார பெயர்ச்சியால் யோக பலன்களையும், அதிர்ஷ்டத்தையும் பெறப்போகின்றது.

குரு அதிசார பெயர்ச்சியால் நன்மையடையும் ராசிகள்

மேஷம், கடகம், துலாம், தனுசு, கும்பம்

இந்த ராசிக்காரர்களுக்கு அடுத்த 85 நாள்களுக்குச் சுப காலங்களாகும். திருமணம், தொழில், வேலை, குழந்தைப் பாக்கியம், வீடு, வாகனம், பொருளாதாரம் மற்றும் தடைப்பட்ட காரியங்கள் போன்றவை அவரவர் சுய ஜாதகத்தில் நடப்பு தசா புத்தியின் பலம், பலவீனத்தைப் பொருத்து அதன் அடிப்படையில் நற்பலன்கள் உண்டாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.