நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

சபரிமலை ஆன்லைன் முன்பதிவு அக்.29 முதல் தொடக்கம்!

சபரிமலை ஆன்லைன் முன்பதிவு அக்.29 முதல் தொடங்கப்படுவது குறித்து..

சபரிமலை

சபரிமலை

Published On :27 அக்டோபர் 2026, 5:56 pm IST

கார்த்திகை மாதம் பிறக்கவிருக்கும் நிலையில், சபரிமலைக்கு மாலை அணியும் பக்தர்களின் வசதிக்காக, சபரிமலை ஆன்லைன் முன்பதிவு வசதி அக். 29ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரவிருக்கும் மண்டல-மகரவிளக்கு பூஜைக் காலத்தில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு, அக்டோபர் 29-ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்குகிறது. பக்தர்களின் வருகையை முறைப்படுத்தும் நோக்கில், முக்கியப் பாதை மற்றும் வனப் பாதைகள் வழியாக வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு நாள்தோறும் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மண்டல மற்றும் மகரவிளக்குப் பூஜைக் காலம் நவம்பர் 16-ஆம் தேதி தொடங்கும் என திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் அறிவித்துள்ளது.

இந்த காலத்தில், சபரிமலை சென்று சுவாமியை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் www.sabarimalaonline.org என்ற இணையதளத்தின் வாயிலாக முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இந்த வசதி இலவசமாகவே, கோயில் நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகிறது. ஒரே நாளில் அதிக பக்தர்கள் கோயிலுக்கு வருவதைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

சபரிமலைக்கு, நிலக்கல்-பம்பை பாதை வழியாக நாளொன்றுக்கு 60,000 பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும், எருமேலி பாதை மற்றும் வந்திபெரியார்-சத்திரம் பாதை வழியாக, தலா 3,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், பம்பையை நோக்கி வரும் பக்தர்களுக்கு நிலக்கல் ஒரு முக்கிய தொடர்பு மற்றும் போக்குவரத்து மையமாகச் செயல்படுகிறது;

நிலக்கல், எருமேலி மற்றும் வண்டிப்பெரியார் ஆகிய இடங்களில் 'ஸ்பாட் புக்கிங்' (நேரடி முன்பதிவு) வசதியும் வழங்கப்படும். நிலக்கல்லில், ஒரு நாளைக்கு அதிகபட்சம் 10,000 பக்தர்கள் வரை நேரடி முன்பதிவு மூலம் அனுமதிக்கப்படுவார்கள். எருமேலி, வண்டிப்பெரியார் மற்றும் சத்திரம் ஆகிய இடங்களில், தலா 2,000 பக்தர்கள் வீதம் நேரடி முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பம்பையில் நேரடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) வசதி இருக்காது என்று தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.