ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

மழை வேண்டி 1008 குடம் புனிதநீர் அபிஷேகம்... அடுத்த சில மணி நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை!

களக்காட்டூர் அக்னீஸ்வரர் ஆலயத்தில் ஆச்சரியம்..

Abhishekam

அக்னீஸ்வரர் ஆலயத்தில் அபிஷேகம் - video crop

Published On :8 அக்டோபர் 2026, 7:08 pm IST

காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் அக்னீஸ்வரர் ஆலயத்தில் மழை வேண்டி 1008 குடம் புனிதநீர் அபிஷேகம் நடைபெற்ற நிலையில், திடீரென கொட்டித் தீர்த்த மழையால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் பகுதியில் 1,500 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீ காமாட்சி உடனுறை அக்னீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் மழையின்றி அவதிப்பட்டு வருவதால், ஸ்ரீ அக்னீஸ்வரர் மூலவருக்கு 1008 குடம் புனிதநீர் அபிஷேகம் நடத்த சிறப்பு யாகம் காலை தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து 1008 சிவ மற்றும் விஷ்ணு ஆலயங்கள் பெயர்கள் மற்றும் அதன் தீர்த்த குளங்களின் பெயர்களைக் கூறி சிறப்பு அபிஷேகம் 11 மணி முதல் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், திடீரென பிற்பகல் 2 மணி அளவில் கருமேகம் சூழ்ந்து களக்காட்டூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது. மதியம் 2 மணி முதல் தொடர்ந்து 3 மணி நேரம் மழை பெய்ததால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அக்னீஸ்வரருக்கு 1008 குட புனிதநீர் அபிஷேகம் ஊற்றி பூஜை செய்த நிலையில், மழை பெய்தது பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.