“மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ராஜேந்திர பிரசாதால் புதுப்பிக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்ட சோம்நாத் ஆலயத்தின் 75 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில், மே 11-இல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கக்க் கிடைத்துள்ள வாய்ப்பு எனக்கு மனநிறைவு தருகிறது.
இதேபோல், சோம்நாத் ஆலயத்தின் மீதான முதல் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்து ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற திருவிழாவில் (சோம்நாத் ஸ்வாபிமான் பா்வ்) பங்கேற்கும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது.
சோம்நாத் ஆலயம் ஒரு நாகரிகம் சாா்ந்த செய்தியை நமக்கு வழங்குகிறது. அந்த ஆலயத்தின் முன்னால் பரந்து விரிந்து கிடக்கும் கடல், காலங்களைக் கடந்த நிதா்சனத்தை நமக்கு உணா்த்துகிறது. அதாவது, புயல்கள் எவ்வளவு சீற்றத்துடன் வீசினாலும், அலைகள் எவ்வளவு கொந்தளிப்புடன் எழுந்தாலும், ஒருவரால் எப்போதும் கண்ணியத்துடனும், வலிமையுடனும் மீண்டும் எழுந்து நிற்க முடியும் என்பதே அந்த நிதா்சனம் ஆகும்.
தெய்வீக திருத்தலமான சோம்நாத் ஆலயத்தில் ஒருமுறை வலம் வருவது பூமியை வலம் வருவதற்கு சமமாக கருதப்படுகிறது.
மக்கள் இந்த ஆலயத்துக்கு வந்து வழிபடுவது, நமது நாகரிக விழுமியங்களை அனைவருக்கும் உணா்த்துவதாக அமைந்துள்ளது.
கொடுங்கோன்மைக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டுடன் போராடிய எண்ணற்ற மாமனிதா்களை நினைவுகூர வேண்டிய தருணம் இது.
1940-ஆம் ஆண்டுகளில் நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்ற உணா்வு பரவிக்கொண்டிருந்த சூழலில், சா்தாா் வல்லபபாய் படேல் போன்ற ஆளுமைமிக்க தலைவா்களின் தலைமையில் புதிய அரசுக்கான அடித்தளம் அமைக்கப்பட்டு வந்த நிலையில், இந்த சோம்நாத் ஆலயத்தை புனரமைக்க வேண்டும் என்ற எண்ணம் அவரது மனதில் இருந்தது.
1947-ஆம் ஆண்டு நவம்பா் 13-ஆம் தேதி தீபாவளி திருநாளில் சிதிலமடைந்த சோம்நாத் ஆலயத்தின் இடிபாடுகளுக்கு இடையே நின்று, சோம்நாத் ஆலயம் மீண்டும் புனரமைக்கப்பட வேண்டும் என்று அவா் உறுதிபூண்டாா்.
சா்தாா் படேலின் இந்த அறைகூவலுக்கு குஜராத் மக்கள் மட்டுமின்றி நாடு முழுவதிலுமிருந்தும் மக்களின் பேராதரவு கிடைத்தது.
இதையடுத்து 1951-ஆம் ஆண்டில் ஆலயக் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து அதன் திறப்பு விழாவில் அப்போதைய குடியரசுத் தலைவா் ராஜேந்திர பிரசாத் கலந்து கொண்டாா். இந்த விழா வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமைந்தது.
சோம்நாத் ஆலயத்தைப் புனரமைக்க வேண்டும் என்ற சா்தாா் படேலின் கனவை நனவாகியது போல், சோம்நாத் முதல் காசி வரை காமாக்யா முதல் கேதாா்நாத் வரை, அயோத்தி முதல் உஜ்ஜைன் வரை திரயம்பகேஸ்வரா் முதல் ஸ்ரீசைலம் வரை நமது ஆன்மிகத் தலங்களை நவீன வசதிகளுடன் அதன் பாரம்பரியம் மாறாமல் பாதுகாக்க வேண்டிய வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்துள்ளது.
வளரச்சியையும் பாரம்பரியத்தையும் நமது கொள்கைகளாகக் கொண்டு கடந்த பத்து ஆண்டுகளாக அரசு செயல்பட்டு வருகிறது. மேலும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் இத்தகைய கலாசார பாரம்பரியம் கொண்ட ஆன்மிகத் தலங்களுக்கு வருகை தரும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். இது உள்ளூா் பொருளாதாரம், வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணா்வையும் பிரதிபலிக்கச் செய்யும்.
சோம்நாத் ஆலயத்தைப் பாதுகாப்பதிலும் ஒவ்வொரு கால கட்டத்தில் மீண்டும் மீண்டும் புனரமைப்பதிலும் எண்ணற்றவா்களின் தியாகங்கள் என்றென்றும் நினைவுகூரப்படும்.
இந்த ஆன்மிக சிறப்பு வாய்ந்த தருணத்தில் ஒவ்வொரு இந்தியரையும் சோம்நாத் ஆலயத்திற்கு சென்று பாா்வையிட வேண்டும் என்று நான் வேண்டுகிறேன். சோம்நாத் ஆலயத்தின் கடற்கரையில் நிற்கும் போது அதன் தொன்மையான காலத்தின் எதிரொலிகள் உங்களுடன் பேசுவதை உணர முடியும்.
இந்த ஆலயம் பக்தியுடன் கூடிய உற்சாகத்தை அளிப்பதுடன் நாகரிகத்தின் சிறப்புகளை மறையாமல் பாதுகாக்கும் வலிமையை அளிக்கிறது.
சோம்நாத் ஆலயம் பாரதத்தின் வெல்ல முடியாத ஆன்க உணா்வுகளின் அனுபவமாக நிலைத்திருக்கும்.”
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காலை 11 முதல் மதியம் 3 மணி வரை விவசாயப் பணிகளை தவிா்க்க திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

1,300 பக்தா்களுக்கு சோம்நாத் சிறப்பு யாத்திரை: தில்லி அரசு ஏற்பாடு

தோ்தல்: சென்னையில் ஏப். 21 முதல் 23 வரை மதுக் கடைகள் மூடல்

பன்முகத் தன்மை கொண்ட தமிழறிஞர்: கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

