பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று(மே 17 ) முதல் 31- ஆம் தேதி வரை 5 புறநகர் மின்சார ரயில்கள் (மெமு) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் பிரிவில் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று முதல் 31- ஆம் தேதி வரை 5 புறநகர் மின்சார ரயில்கள் (மெமு) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை-அரக்கோணம் பிரிவில் அரக்கோணம் பணிமனையில் வரும் 17, 18 ஆகிய தேதிகளில் (வெள்ளி, சனிக்கிழமை) தண்டவாள, தொழில்நுட்ப பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால் பயணிகள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட புறநகர் மின்சார ரயில்கள் (மெமு) ரத்து செய்யப்பட்டுள்ளன.
வரும் 17 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் மே 31 வரை அதிகாலை 4 மணி, 5 மணி மற்றும் 6.25 மணிகளுக்கு அரக்கோணத்திலிருந்து புறப்பட்டு திருத்தணிக்குச் செல்லும் இமு, மெமு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
இதேபோல 17- ஆம் தேதி முதல் 31 -ஆம் தேதி வரை இரவு 9.15 மணிக்கும், இரவு 11 மணிக்கும் திருத்தணியிலிருந்து புறப்பட்டு அரக்கோணம் செல்லும் இமு ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
பகுதி அளவில் ரத்து: வரும் மே 17 முதல் 31-ஆம் தேதி வரை சென்னையில் இருந்து பகல் 10.30 மணிக்கும், பகல் 11 மணிக்கும், மாலை 5.15, 5.45 மணிக்கும், 6.05, 6.40, இரவு 7.45, 8.20, 9.10 மற்றும் 10.55 மணிகளுக்கு மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டு அரக்கோணம் செல்லும் இமு ரயில்கள் திருவாலங்காடு வரை மட்டுமே இயக்கப்படும்.
எதிர்வழியில் அந்த குறிப்பிட்ட நாள்களில் அரக்கோணத்துக்குப் பதிலாக திருவாலங்காடு நிலையத்திலிருந்து இமு, மெமு ரயில்கள் குறிப்பிட்ட நேரங்களில் புறப்பட்டு மூர் மார்க்கெட் மற்றும் சென்னை கடற்கரையை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Due to maintenance works, five suburban electric trains (MEMU) have been completely cancelled from today (May 17) until the 31st.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாளை முதல் ஜூன் 12 வரை 5 ‘இமு’ ரயில்கள் ரத்து

இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து

நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து

அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்று முதல் 21 நாள்களுக்கு ரத்து!
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


