சித்திரை மாத பௌர்ணமியையொட்டி சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் இன்று காலை முதல் திரளான பக்தர்கள் மலைக்கோயிலுக்கு வருகை தந்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு மாதம்தோறும் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் ஆகிய நாள்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
இந்த நிலையில், சித்திரை மாத பௌா்ணமியொட்டி மே 1 (இன்று) முழுவதும் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்வதற்கு வனத்துறை அனுமதியளித்தது.
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பிளாஸ்டிக் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களைக் கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Summary
On the occasion of the full moon in the month of Chithirai, a large number of devotees have been visiting the hill temple of Sri Sundara Mahalingam at Sathuragiri since this morning.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சித்ரா பெளர்ணமி விரதமும் பலன்களும்!

திருவண்ணாமலை: கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

சித்ரா பௌர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


