அவிநாசி: கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா செவ்வாய்க்கிழமை(ஏப். 21) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகியது.
கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மைப் பெற்றதும், முதலையுண்ட பாலகனை சுந்தரமூர்த்தி நாயனார் பதிகம் பாடி மீண்டும் உயிர்ப்பித்து எழச்செய்த திருத்தலமாக கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் தேர்த் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு தேர்த் திருவிழா வேத பாராயணம், பஞ்ச வாத்தியம் முழங்க கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை கோலாகலமாக தொடங்கியது.
கொடியேற்றத்தை ஒட்டி விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், கருணாம்பிகையம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றது.

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில்
இதையடுத்து, பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுலவேதாகம் பாடசாலை முதல்வர் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சிவம் தலைமையில் வேத பாடசாலை மாணவர்களுடான குழுவினர் வேதபாராயணம் நிகழ்த்தினர். இதில், அவிநாசி வாகீசர் மாடாலாயம் காமாட்சிதாச சுவாமி, அறங்காவலர்கள் உள்பட எராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து 22-ஆம் தேதி மாலை சூரிய, சந்தர மண்டல காட்சி, 23-ஆம் தேதி அதிகார நந்தி, கிளி, பூதம் அன்னபச்சி வாகனக் காட்சிகள், 24-ஆம் தேதி புஷ்ப பல்லக்கு நடைபெற உள்ளது. 25-ஆம் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல், கரிவரதராஜப் பெருமாள் கோயில் கொடியேற்றம் ஆகியவை நடைபெற உள்ளன.
26-ஆம் தேதி இரவு கற்பகவிருட்சம், சுவாமி திருக்கல்யாணம் ஆகியவை நடைபெற உள்ளன. 27-ஆம் தேதி காலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப். 28-ஆம் தேதி காலை அவிநாசியப்பர் திருத்தேர் வடம் பிடித்தல் தேரோட்டம், வடக்கு ரத வீதியில் தேர் நிறுத்தப்படும். 29-ஆம் தேதி காலை 8 மணிக்கு அவிநாசியப்பர் திருத்தேர் வடம் பிடித்தல், தேர் நிலை சேறுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 30-ஆம் தேதி காலை 8 மணிக்கு கருணாம்பிகையம்மன், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், கரிவரதராஜப் பெருமாள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மே 1-ஆம் தேதி பரிவேட்டை, 2-ஆம் தேதி இரவு தெப்பத் தேர் உற்சவம், 3-ஆம் தேதி நடராஜப் பெருமான் மகா தரிசனம், 4-ஆம் தேதி மஞ்சள் நீர், இரவு மயில் வாகனக் காட்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், அறங்காவலர்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
Summary
The Chithirai Chariot Festival at the Avinashilingeswarar Temple (accompanied by Goddess Karunambikai) commenced on Tuesday (April 21) morning with the flag-hoisting ceremony.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் ஸ்ரீகச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சுவாமிமலையில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்!

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றம்!

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ்த் திருவிழா வரும் 22இல் தொடக்கம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


