பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பெருவாழ்விற்கு உதவும் 16 செல்வங்கள்

ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய நூல் என்பதுடன், இளம் தம்பதியினருக்கு பரிசளிக்க உகந்த நூல்.

Published On :26 அக்டோபர் 2026, 7:32 pm IST

பெருவாழ்விற்கு உதவும் 16 செல்வங்கள் - முனைவர் பெருங்குளம் கே.ஆர்.பி. மணிமொழிச்செல்வன்; பக்.168; ரூ.220; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-600 017, ✆ 044- 2434 2926.

'நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்' என்பார்கள்; அது போன்ற நல்லதொரு குடும்பத்தை உருவாக்குவது ஒவ்வொருவரின் கடமை. இதனால்தான் திருமணத்தின்போது '16 செல்வங்களையும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும்' என்று பெரியோர் மணமக்களை வாழ்த்துவார்கள். அந்தப் பதினாறு செல்வங்கள் என்னென்ன?, அவற்றை வாழ்க்கையில் எவ்வாறு கடைப்பிடிப்பது?, அவற்றைக் கடைப்பிடித்தால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? என்பது குறித்து திராவிட இயக்கத்தைச் சேர்ந்த கே.ஆர்.பி. மணிமொழியனின் மூத்த மகனான நூலாசிரியர் சிறப்பாக எழுதியுள்ளார்.

புகழ், கல்வி, வலிமை, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல் விதி, நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இனிமை, துணிவு, நோயின்மை, நீண்ட ஆயுள் என்ற அந்த 16 செல்வங்களின் அவசியமும், அவற்றை எவ்வாறு வாழ்க்கையில் பயன்படுத்துவது, முன்னேறுவது என்பதையெல்லாம் எளிய நடையில் சுவாரஸ்யமாக சாமானியருக்கும் புரியும் வகையில் நூலாசிரியர் அளித்துள்ளார்.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அனுபவம், பயிற்சி, முயற்சி, போராட்டங்கள், இன்ப-துன்பங்கள், சுகமான சுமைகளை சந்தித்து சாமானிய மனிதர்கள் சாதனையாளராக மாறுவதற்கான வழிகாட்டுதல் இந்த நூலில் உள்ளன.

நூலைப் படித்துப் பார்க்கும்போது நூலாசிரியரின் எழுத்து நடையும், அனுபவ அறிவும் அவரது பிற நூல்களை வாசிக்கத் தூண்டுகிறது.

ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய நூல் என்பதுடன், இளம் தம்பதியினருக்கு பரிசளிக்க உகந்த நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.