கங்கை நதிப்புறத்து...நவீன இலக்கியச் சிற்பிகள்-வி.அன்புமணி, பக். 200; ரூ. 250; கிழக்கு பதிப்பகம், சென்னை-600 014, ✆ 044-4200 9603.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட இலக்கிய வரலாற்றை கொண்டுள்ள மொழியான ஹிந்தியில் நவீன இலக்கியத்தை உருவாக்கிய 52 படைப்பாளிகளைப் பற்றிய தொகுப்பு.
நவீன ஹிந்தி இலக்கியத்தின் தந்தையாக கருதப்படும் 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரதேந்து ஹரிஷ்சந்திரா, இந்திய இலக்கிய வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமான பிரேம்சந்த், இன்றும் இயங்கி வரும் மிருதுளா கர்க் உள்ளிட்டோர் பற்றிய வாழ்க்கைக் குறிப்புடன் அவர்களின் பங்களிப்பையும் ஹிந்தி இலக்கியத்தின் போக்கையும் விமர்சனப் பார்வையுடன் அளிக்கும் இலக்கிய வரலாற்று ஆய்வுத் தொகுப்பாக இப்புத்தகம் அமைந்துள்ளது.
இந்த எழுத்து ஆளுமைகள் இன்றைய பாகிஸ்தானில் அமைந்துள்ள மேற்கு பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், பிகார்,
வடகிழக்கு மாநிலங்கள் வரை மிகப் பரந்துபட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றபோதிலும், இவர்களது தாய்மொழி வெவ்வேறாக இருந்தபோதிலும், ஹிந்தி இலக்கிய உலகில் செயல்பட்டு உன்னதங்களை தொட்டிருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்க செய்தி.
வாழ்க்கைப் போராட்டங்களையும் தங்களது மனப் போராட்டங்களையும் வெல்ல இவர்களில் பலரும் எழுத்தை ஆயுதமாக்கிக் கொண்டவர்கள். அதன் மூலம் பல புதுமைகளைப் புகுத்தினார்கள்.
தங்கள் எழுத்தால் மொழி, இலக்கியம் மற்றும் சமூக மாற்றங்களுக்கு இப்படைப்பாளிகள் செய்த பங்களிப்பை மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார் நூலாசிரியர்.
ஹிந்தியின் முக்கிய இலக்கிய கர்த்தாக்களுக்கும் அவர்களின் படைப்புகளுக்கும் சிறந்த அறிமுகமாக அமைந்துள்ளது.
வெவ்வேறு காலகட்டங்களில் நிலவிய ஹிந்தி இலக்கிய சித்தாந்தங்கள் பற்றிய பின்குறிப்புகள் தீவிர இலக்கிய வாசகர்களுக்கு பயனுள்ளவையாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நினைவலைகள்

வரப்பெற்றோம் (04-05-2026)

விண்வெளி மாயம் 1000

இந்திய இலக்கியச் சிற்பிகள்-திருமூலர்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

