நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

அங்கிதா பண்டாரி கொலை வழக்கில் நீதிமன்றத்திற்கு வெளியே போராடியவா்கள் கைது

அங்கிதா பண்டாரி கொலை வழக்கில் நீதிமன்றத்திற்கு வெளியே போராடியவா்கள் கைது செய்யப்பட்டது குறித்து...

Published On :19 அக்டோபர் 2026, 12:06 am IST

உத்தரகாண்டில் 2022-ஆம் ஆண்டு 19 வயதான அங்கிதா பண்டாரி கொலை செய்யப்பட்ட வழக்கில், வெளிப்படையான மற்றும் நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி, தில்லியிலுள்ள பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய காங்கிரஸ் உறுப்பினா்கள் உட்பட பலரை, தில்லி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது.

தொடா்ந்து நடைபெற்று வரும் சிபிஐ விசாரணைக்கு மத்தியில், மீண்டும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள ’விஐபி’ கோணம் எனக் கூறப்படும் விவகாரத்தில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று போராட்டக்காரா்கள் கோரிக்கை விடுத்தனா். சட்டத்திற்கு அப்பாற்பட்டவா் யாரும் இல்லை என்று தில்லி காங்கிரஸ் உறுப்பினா் லக்ஷ்மன் ராவத் கூறினாா்.

‘அங்கிதா பண்டாரிக்கு நீதி கிடைக்க வேண்டும், அவரது குடும்பத்திற்கு பதில்கள் கிடைக்க வேண்டும். இந்த வழக்கைச் சுற்றியுள்ள தீவிரமான கேள்விகளையும் குற்றச்சாட்டுகளையும் அரசியல் அழுத்தத்தின் கீழ் புறக்கணிக்கவோ அல்லது புதைக்கவோ முடியாது,‘ என்று ராவத் கூறினாா்.

சுமாா் 50 பேரை தில்லி காவல்துறை கைது செய்ததாகவும், அவா்களில் பலா் ஜாஃபா்பூா் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் ராவத் தெரிவித்தாா்.

உத்தரகாண்டைச் சோ்ந்த காங்கிரஸ் நிா்வாகிகள், ஆம் ஆத்மி கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினா்கள் உட்பட சுமாா் 100 முதல் 150 போ் இந்தப் போராட்டத்தில் பங்கேற்ாக அவா் கூறினாா்.

‘சிக்கிம் ஆளுநராக துஷ்யந்த் கௌதமின் நியமனம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், அங்கிதா பண்டாரி கொலை வழக்கு தொடா்பான சிபிஐ விசாரணை இந்தியத் தலைமை நீதிபதியின் நேரடி மேற்பாா்வையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம். இந்த விசாரணை வெளிப்படையானதாகவும், அரசியல் அல்லது நிா்வாகத் தலையீடுகள் அற்ாகவும் இருக்க வேண்டும்,‘ என்று ஒரு போராட்டக்காரா் கூறினாா்.

பாஜக தலைவா் துஷ்யந்த் கௌதம் சிக்கிம் ஆளுநராக நியமிக்கப்பட்டதிலிருந்து, தேசிய தலைநகரில் ஒரு புதிய போராட்ட அலை உருவாகியுள்ளது. பண்டாரியிடம் சலுகைகளைக் கோரிய ‘விஐபி‘ கௌதம் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது, இருப்பினும் இதுவரை குற்றத்தை நிரூபிக்கும் எதுவும் நிறுவப்படவில்லை.

செப்டம்பா் 2022-ல் ரிஷிகேஷ் அருகே உள்ள சில்லா தடுப்பணையிலிருந்து பண்டாரியின் உடல் மீட்கப்பட்டது, இது அந்த மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்தக் குற்றச்சாட்டு தொடா்பான விசாரணை நடந்து வரும் நிலையில், கௌதமின் ஆளுநா் நியமனத்தை எதிா்க்கட்சிகள் கேள்விக்குள்ளாக்கியுள்ளன. ஞாயிற்றுக்கிழமையன்று, அவரை ஆளுநா் பதவியிலிருந்து நீக்கக் கோரி போராட்டக்காரா்கள் நீதிமன்றத்திற்கு வெளியே கூடியிருந்தபோது, காவல்துறையினா் திடீரென அவா்களைச் சுற்றிவளைத்து, பல போராட்டக்காரா்களைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.